இனி பூஜை பாத்திரங்களை கையால் தேய்த்தே பளிச்சின்னு மாற்ற செலவே இல்லாத சூப்பரான இந்த டிரிக்ஸை டிரை பண்ணுங்க. செம்பு பித்தளைன்னு எந்த பூஜை பாத்திரமா இருந்தாலும் சும்மா தகதகன்னு மின்னும்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இல்ல சரி செய்வதற்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலே பூஜை பாத்திரத்திரங்களை சுத்தம் செய்வது தான். ஏனென்றால் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதை விட சிக்கலான விஷயம் சுத்தம் செய்த பாத்திரங்கள் மீண்டும் கருக்காமல் இருக்க வேண்டும் என்பது தான். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்யவும், அதே நேரத்தில் சுத்தம் செய்த பாத்திரங்கள் கருப்படியாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நாம் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதென்றால் செம்பு பாத்திரங்களை தனியாகவும் பித்தளை பாத்திரங்களை தனியாகவும் சுத்தம் செய்வோம். அப்படி அல்லாமல் இது இரண்டும் ஒரே பொருளை கொண்டு சுலபமாக எப்படி சுத்தம் செய்வது என்பதையும் இப்போது பார்க்கலாம். இதனால் நேரமும் பணமும் மிச்சமாகும். இந்த முறை நம் பாட்டி காலத்தில் இருந்து கடைப்பிடித்தது தான் ஆனால் பலரும் இதை மறந்து விட்டார்கள் இப்போது சற்று ஞாபகப்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை
இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய நமக்கு தேவையான முக்கியமான பொருள் செம்மண் தூள் தான். ஒரு பவுலில் கொஞ்சமாக செங்கல் துளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை கலந்து பேஸ்ட் போல குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தயாரிக்கும் போது எந்த காரணத்திற்காகவும் இதில் சால்ட் சேர்த்து விடாதீர்கள். உப்பு சேர்த்து தேய்க்கும் பொழுது அந்த நேரத்தில் பளிச்சென்று மாறும் ஆனால் சீக்கிரத்தில் கருத்து விடும்.

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய பெரும்பாலும் எல்லா பாத்திரங்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம். அப்படி செய்யக் கூடாது இதனால் அனைத்து பாத்திரத்திலும் எண்ணெய் பிசுக்கு படிந்து அதை சுத்தம் செய்ய அதிக நேரம் பிடிக்கும். பூஜை பாத்திரங்கள் தண்ணீரில் ஊற வைக்காமல் டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து எண்ணெய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை துடைத்த பிறகு இந்த பேஸ்ட்டை மேலே தேய்த்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அனைத்து பூஜை பாத்திரத்திலும் இதை தேய்த்த பிறகு முதலில் பேஸ்ட் தேய்த்த பாத்திரத்தில் இருந்து தேய்க்க தொடங்குங்கள். இவை தவிர வேறு எதையும் சேர்த்து தேய்க்க வேண்டாம். வெறும் கையாலே இதை வைத்து மட்டும் தேய்த்தாலே போதும். பாத்திரங்கள் எல்லாம் பளிச்சென்று மாறி விடும். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் வைத்து கழுவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி உங்கள் வீட்டில் இருக்கும் மெத்தை முதல் சோபா வரை அனைத்துமே பளிச்சுன்னு மாற இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. இந்த சிம்பிள் டெக்னிக் தெரியாம இத்தனை நாள் இதையெல்லாம் அசிங்கமா வெச்சிருந்தோமேன்னு நினைப்பீங்க.

அதன் பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து பூஜை பாத்திரங்கள் இருக்கும் தண்ணீரை எல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்த பிறகு எடுத்து பூஜைக்கு பயன்படுத்தலாம். இப்படி தேய்த்த பூஜை பாத்திரங்கள் நீண்ட நாட்களுக்கு கருக்காமலும் கரும்புள்ளிகள் விழாமலும் பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -