இனி உங்கள் வீட்டில் இருக்கும் மெத்தை முதல் சோபா வரை அனைத்துமே பளிச்சுன்னு மாற இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. இந்த சிம்பிள் டெக்னிக் தெரியாம இத்தனை நாள் இதையெல்லாம் அசிங்கமா வெச்சிருந்தோமேன்னு நினைப்பீங்க.

- Advertisement -

இப்போதெல்லாம் எல்லோர் வீட்டு வரவேற்பறையிலும் ஒரு சோபா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது. இது அவசியம் என்பதை விட அலங்கார பொருளாக தான் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதிலும் சோபாவை வாங்கும் போது வெள்ளை நிறம் போன்ற வெளிர் நிறங்களில் வாங்குவோம் ஏனென்றால் இது தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் வாங்கிய பின் அதை பராமரிப்பதில் தான் சிக்கலே தொடங்குகிறது. இதே போல தான் மெத்தையும் மற்ற இடங்களை சுத்தம் செய்வது போல இந்த சோபா மெத்தைகளை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்து விட முடியாது. இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் சோபா மெத்தை இவற்றையெல்லாம் எளிமையான சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் வேக்கம் கிளீனர் எனப்படும் தூசுகளை உறிஞ்சி சுத்தப்படுத்தும் கருவி இருக்கிறது. அது இருந்தால் முதலில் அதை வைத்து சோபா மெத்தையில் இருக்கும் தூசுகளை எல்லாம் எடுத்து விடுங்கள். அவை இல்லாத பட்சத்தில் ஒரு துணியை ஈரமாக்கி நன்றாக பிழிந்து விட்டு அதை வைத்து துடைத்து விடுங்கள். வெள்ளை நிற சோபாவை துடைக்கும் போது துணியை ஈரப்படுத்தாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சோபா மெத்தை இரண்டிலும் கறை பட்டு விட்டால் உடனே சுத்தம் செய்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து துடைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால் அது விடாப்பிடியான கறையாக மாறி விடும். அதன் பிறகு அதை சுத்தப்படுத்துவது கடினமான காரியம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வினிகர், துணி துவைக்கும் லிக்வீட் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் துணியை நனைத்து பிழிந்த பிறகு கறை படிந்த சோபாவை தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இதை செய்யும் போது கறை இருக்கும் இடத்தில் மட்டும் தேய்த்தால் போதும். இந்த முறையை வெள்ளை நிற சோபா சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அதே போல லேசான கறைகள் இருக்கும் இடத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை கலந்து தேய்த்தால் கறைகள் எளிதில் நீங்கி விடும். கொஞ்சம் விடாப்பிடியான கறைகளாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா கலந்து கெட்டியான பேஸ்ட் போல குழைத்து அதை கறைகளின் மீது தேய்த்து விடுங்கள். அதன் பிறகு ஈரத்துணி வைத்து துடைத்து விட்டால் கறைகள் அனைத்தும் நீங்கி விடும்.

இதை தவிர கடைகளில் கிடைக்கும் ஃபோம் கிளீனர் அல்லது கார்பெட் கிளீனரை கறை படிந்த இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து துடைத்து எடுத்தாலும் கறைகள் நீங்கி விடும்.ஷஇந்த முறையை வெள்ளை நிற சோபாவை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது மட்டும் இன்றி ரப்பிங் ஆல்கஹாலை காட்டன் பஞ்சில் நனைத்த பின்பு சோபாவில் கறையுள்ள இடங்களில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இந்த முறை லெதர் மற்றும் மைக்ரோஃபைபர் சோபா வகைகளை சுத்தப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: அட! கரப்பான் பூச்சியை இவ்வளவு சிம்பிளா இதை வெச்சி விரட்டலாம்ன்னு இது வரைக்கும் தெரியாம போச்சே. இதுக்கு அப்புறம் ஒரு கரப்பான் பூச்சி கூட நீங்க இருக்க ஏரியா பக்கம் கூட வராது.

இந்த பதிவில் வீட்டில் உள்ள சோபா மெத்தைகளை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்தும் கடைகளில் விற்கும் பொருட்களை வைத்து எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -