உங்கள் வீட்டு பூஜை அலமாறியில் இந்த 1 பொருள் இருந்தால் அதை உடனே அகற்றி விடுங்கள். இது பூஜை அறையில் நெகட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் நாம் செய்யவே கூடாத ஒரு சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய விஷயங்களில் ஏதாவது ஒரு தவறை நீங்கள் பூஜை அறையில் செய்தாலும், அது உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் செய்த பூஜைக்கு உண்டான பலன் முழுமையாக கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய மனதிற்கு சரி என்று பட்டால் பின் சொல்லக்கூடிய ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

பூஜையறை அலமாரியில் வைக்க கூடாத பொருள்:
இன்று பெரும்பாலானோர் பூஜை அறை அலமாரி அழுக்காக கூடாது எண்ணெய் பசை அந்த அலமாரியில் படக்கூடாது என்ற காரணத்தால் அதன் மேலே நியூஸ் பேப்பரை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைக்கிறார்கள். நியூஸ் பேப்பரை விரித்து அதன் மேலே விளக்கு ஏற்றுகிறார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. நியூஸ் பேப்பரில் இருந்து, அதில் அச்சடிக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இருந்து எதிர்மறையான ஆற்றல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்த இடத்தில் நீங்கள் செய்யக்கூடிய பூஜை முழுமை பெறாமல் போவதற்கு அந்த நியூஸ் பேப்பரும் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஆகவே நியூஸ் பேப்பர் சுவாமி அறையில் விரிக்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள்.

- Advertisement -

காலண்டர் காகிதங்களை பூஜையறையில் போடலாமா. அல்லது வெள்ளையாக இருக்கும் காகிதங்களை பூஜையறையில் போடலாமா என்ற கேள்வி நிச்சயம் எழும். கூடுமானவரை இப்படிப்பட்ட காகிதங்களை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைப்பதை விட, மஞ்சள் நிற துணி, பச்சை நிற துணி, காவி துணி போன்ற துணிகளை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைக்கலாம். ஆனாலும், இப்படி துணிகளை விரித்து அதன் மேலே விளக்கு வைத்து ஏற்றுவது என்பது கொஞ்சம் ஆபத்தான விஷயம்தான். ஏனென்றால் தீப்பிடிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் விளக்குக்கு பக்கத்தில் வைக்க கூடாது. அப்படி தவறி அதில் தீ பட்டு விட்டால் அதுவே நமக்கு ஒரு அபசகுனமாக மாறிவிடும். (விளக்குக்கு கீழே பேப்பர் துணி எதுவுமே வேண்டாம். பித்தளை தட்டு வைத்து விளக்குகளை ஏற்றுங்கள்.)

அடுத்து பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை எதுவும் பூஜையில் பயன்படுத்த வேண்டாம். இந்த பிளாஸ்டிக் ஒரு விதமான நெகடிவ் எனர்ஜியை வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. பிளாஸ்டிக் சில்வரை கூடுமானவரை பூஜையறையில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, பாத்திரங்களை பூஜையறையில் பயன்படுத்துவது சிறப்பு.

- Advertisement -

ஒரு செம்பு தகடு வாங்கிக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதுங்கள். மெல்லிசாகவே எந்திரங்கள் எழுதுவதற்காக தகடு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி உங்கள் குலதெய்வத்தின் பெயரை அதில் பொறித்து பூஜையறையில் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இதிலிருந்து வெளியேறக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்திற்கு நிறைவான சந்தோஷத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

இந்த செம்புத்தகடில் குலதெய்வத்தின் பெயரை எழுதலாம் அப்படி இல்லை என்றால், உங்களுக்கு பிடித்த ஒரு வரி மந்திரம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரை எழுதிக் கூட பூஜையறையில் வைத்து வழிபாடலாம். நல்லது நினைத்து நாம் செய்யக்கூடிய எல்லா விஷயங்களும் நமக்கு நல்லதை மட்டுமே திருப்பித் தரும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -