இந்த தெய்வங்களை எல்லாம் வீட்டில் வைத்து வணங்கினால் அது குடும்பத்திற்கு நல்லதல்ல என்றும், இதனால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படி வழிபட கூடாத தெய்வங்கள் யார்?

- Advertisement -

பொதுவாக அனைவரின் வீட்டிலும் பூஜை அறை என்ற ஒன்று இருக்கும். அதில் நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் என தெய்வங்களின் படத்தினை ஆவாகம் செய்து வழிபடுவது நம்முடைய வழக்கம். இப்படி வழிபடுவதில் ஒரு சில தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடும் போது நமக்கு துன்பங்கள் நேரும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த மாதிரியான தெய்வங்கள், ஏன் அவர்களை வைத்து வணங்கக் கூடாது என்பது போன்ற தகவல்களை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தெய்வங்களையே நாம் இரண்டு வகையாக தான் பிரித்துப் பார்க்கிறோம். அதில் உக்கிர தெய்வம் என்றும், சாந்த தெய்வம் என்றும் தனித்தனியாக பிரித்து தான் வணங்குகிறோம். தெய்வங்களிலே இவர்கள் இரண்டு பேருக்குமான வழிபாடுகளை தனித்தனியாக தான் செய்கிறோம். அந்த வகையில் உக்கிர தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்பது நம் முன்னோர்களின் காலத்திலிருந்து சொல்லும் ஒரு வழக்கம் தான். அதற்கு என்ன காரணம் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

உக்கிர தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்க கூடாது ஏன்?
உக்கிர தெய்வங்கள் வரிசையில் பைரவர், காளி, பிரத்தியங்கரா தேவி, வாராகி அம்மன் போன்றவர்கள் உள்ளார்கள். இன்று பெரும்பாலும் இவர்களை வீட்டில் வைத்து வழிபடும் முறைகள் அதிக அளவில் பெருகி வருகிறது என்பதும் உண்மை தான். ஆனால் இவர்களை வீட்டில் வைத்து வழிபடுவது அவ்வளவு நல்லதல்ல என்றும் ஆன்மீகம் சொல்கிறது.

சாந்தமான தெய்வங்களை நாம் வீட்டில் வைத்து வழிபடும் போது அதற்கான வழிமுறைகளும், வழிபாட்டு முறைகளும் மிகவும் குறைவு. மனதால் நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கூட அந்த பூஜையானது நிறைவு பெற்று விடும். இந்த உக்கர தெய்வங்கள் அப்படி கிடையாது. இவர்களுக்கான வழிபாடு முறைப்படி செய்ய வேண்டும். அந்தந்த காலத்தில் இவர்களுக்கான வழிபாட்டை சரியாக செய்ய வேண்டும். நெய்வேத்தியம் முதற் கொண்டு சரியாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இவர்களை வைத்து வணங்கும் இடம், வணங்குபவர்கள் என அனைத்துமே தூய்மையாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் நம்மால் சரியாக பார்த்துக் கொள்ள முடியும் பூஜைகளை சரியாக செய்ய முடியும் அதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டுமே இவர்களை நாம் வீட்டில் வைத்து வணங்கலாம் என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரையில் இவர்களை வீட்டில் வைத்து வழிபடுவதை தவிர்த்து, ஆலயங்களில் சென்று வழிபடுவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் இந்த உக்கிர தெய்வங்கள் கோபம் வரும் நேரத்தில் எதிரியை மட்டுமில்லை, இவர்களுக்கான வழிபாட்டையும் இவர்கள் காண பூஜையில் குறைபாடு இருந்தாலும் அது நம்மையே கூட தாக்கி விடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் இந்த தெய்வங்களை வீட்டில் வைத்து தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.

இந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான சரியான வழிகாட்டலையும் சரியான வழிமுறைகளையும் தெரிந்தவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு அதன்படி செய்வது மிகவும் உத்தமம்.

- Advertisement -