அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய எளிய பூஜை அறை குறிப்புகள் 10! இவ்வளவு நாளா இது கூட தெரியலையேன்னு வருத்தப்பட போறீங்க.

vilakku-pooja-room
- Advertisement -

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கக் கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக் கூடிய வகையிலான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமழும் படி வைத்திருந்தால் மகா லக்ஷ்மி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள். அத்தகைய எளிய பூஜை அறை குறிப்புகளை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

santhanam

குறிப்பு 1:
பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சள் குழைத்து வைக்காமல், சந்தனம் குழைத்து வைத்தால் நீண்ட நாள் வரை அழியாமல், உதிராமல் இருக்கும். சந்தனத்தை சிறிதளவு பன்னீர் ஊற்றி, ஜவ்வாது அல்லது தசாங்கம் பவுடர் கலந்து உபயோகித்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
பூஜை அறையில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் எப்போதும் நல்லெண்ணெய் ஆக இருப்பது நல்லது. நல்லெண்ணெயுடன் ஜவ்வாது அல்லது தசாங்கம் பவுடர் கலந்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் பொழுதும் தெய்வீக மணம் வீசி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். தசாங்கம் என்பது நாட்டு மருந்து கடைகளில் அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் எளிதாக கிடைக்கும் ஒரு பூஜை பொருள்.

manjal1

குறிப்பு 3:
மஞ்சள் மற்றும் குங்குமத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைப்பதை விட கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கட்டி தட்டாமல் பூச்சி, புழுக்கள் வராமல் வாங்கிய பொழுது இருந்தது போலவே அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள், நீண்ட காலம் நீடித்து உழைக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
விசேஷ நாட்களில் பூஜை அறையில் கோலம் போட கோல மாவு பயன்படுத்துவதை தவிர்த்து அரிசி மாவை கரைத்து அதில் கோலம் போட்டால் நீண்ட நேரம் கலையாமல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மூன்று பங்கு அரிசி மாவுடன், ஒரு பங்கு மைதா மாவு சேர்த்துப் போட்டால் கோலம் பளிச்சென இருக்கும்.

anjarai-petti1

குறிப்பு 5:
பூஜைக்கு உரிய பொருட்கள் எல்லாம் தனித்தனியாக வைத்துக் கொள்வதை விட நாம் சமையலறையில் பயன்படுத்தும் மசாலா டப்பாவை புதிதாக வாங்கி அதில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பொருட்களை போட்டு வைத்துக் கொண்டால் போதும். குங்குமம், மஞ்சள், சந்தனம், கற்பூரம், திரி, வத்திப்பட்டி என்று நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அழகாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
பூஜை அறையில் வாரம் ஒரு முறை சாம்பிராணி போட்டு வீடு முழுவதும் காண்பிக்க நேர்மறை ஆற்றல்கள் பெருகும் என்பது ஐதீகம். அப்படி சாம்பிராணி போடும் பொழுது சாம்பிராணியுடன் சேர்த்து வெட்டிவேர் மற்றும் தசாங்கம் பவுடரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதைக் கொண்டு சாம்பிராணி புகை போட்டால் நல்ல மணமுடன், நம் சிந்தனையை தெளிவாக்கும். தீய வழிகளில் நம் மனம் செல்லாமல் ஆன்மீக வழியில் ஈடுபட துணை புரியும்.

sambrani

குறிப்பு 7:
பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை சுத்தம் செய்யும் பொழுது காட்டன் துணியில் நீங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் லிக்விட்டை கொஞ்சமாக ஊற்றி துடைத்தால் நொடியில் பளபளவென மாறி, வேலையும் சுலபமாக ஆகிவிடும்.

குறிப்பு 8:
பூஜை அறையில் இருக்கும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருக்கும் எண்ணெய்ப் பசை எளிதாக நீங்க கொஞ்சம் ஹேண்ட் வாஷ் அல்லது வாஷிங் லிக்விட் விட்டு தேங்காய் நார் கொண்டு லேசாக துடைத்தால் போதும். கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பளபளவென இருக்கும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல சுத்தம் செய்து கொள்ளலாம்.

theertham1

குறிப்பு 9:
நீங்கள் பூஜை அறையில் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, நாலைந்து துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்தால் கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் தயாராகிவிடும். பூஜை முடிந்ததும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதிலிருந்து தீர்த்தம் கொடுக்க தீராத நோய் எல்லாம் தீரும்.

குறிப்பு 10:
கற்பூரம், கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றும் பொழுது அந்த கற்பூரத் தட்டில் சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்து ஏற்ற கருப்பு படியாமல் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் சாம்பிராணி கட்டியை தண்ணீரில் நனைத்து விட்டு பின்னர் கற்பூரத்தை வைத்து ஏற்ற நீண்ட நேரம் நின்று எரியும், மேலும் வாசனையும் அதிகரித்து தரும்.

- Advertisement -