தயவுசெய்து இந்த சின்ன சின்ன தவறுகளை கூட பூஜையறையில் செய்யவே செய்யாதிங்க. அது உங்கள் பூஜைக்கான பலனை முழுமையாக கொடுக்காது.

- Advertisement -

பூஜை அறையில், பூஜை செய்யும்போது நம்மை அறியாமலேயே சின்ன சின்ன தவறுகளை செய்து விடுகின்றோம். அந்த தவறுகளின் மூலம் குடும்பத்திற்கு ஏதாவது பெரிய கஷ்டங்கள் வருமா. கடவுள் நம்மை தண்டித்து விடுவாரா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. செய்யக்கூடிய தவறுகள் அறியாமல் செய்யப்படுவதன் மூலம் கடவுள் நம்மை தண்டிக்க மாட்டார். இருப்பினும் நாம் செய்யக்கூடிய பூஜை நிறைவடைய வேண்டும். மனதிற்கு சாந்தி கிடைக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றுவது நல்லது. உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் இந்த தவறுகள் எல்லாம் அடிக்கடி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் செய்யக்கூடாத அந்த தவறுகள் என்னென்ன ஒரு சில ஆன்மீகம் சார்ந்த குறிப்புகள் இதோ உங்களுக்காக.

பூஜை அறையில் செய்ய கூடாதவை
பூஜையறை என்றாலே அதில் முதலாவதாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விளக்கு. சில வீட்டில் பெண்கள் விளக்கை பந்தம் போல பெரியதாக ஏற்றி வைப்பார்கள். அது முற்றிலும் தவறு. உக்கிரமான பூஜைக்கு தான் விளக்குகள் அப்படி ஏற்றப்பட வேண்டும். சாந்த நிலையில் இருக்கக்கூடிய நம் வீட்டு சுவாமிகளுக்கு, விளக்கும் சாந்தமாகத்தான் எரிய வேண்டும். மல்லிகை பூ மொட்டு இருக்கும் அல்லவா, அந்த அளவிற்கு தீபம் இருந்தால் போதும்.

- Advertisement -

எப்போதுமே பூஜை அறையில் தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். சில பேர் வீட்டில் இறைவனுக்கு சீரியல் செட் போட்டு அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். அவ்வளவு மின் விளக்குகள் பூஜையறையில் தேவை கிடையாது. கோவில் கருவறைக்கு விளக்கு எந்த அளவுக்கு அழகை கொடுக்குமோ, அதே அளவுக்கு நம் பூஜை அறைக்கும் விளக்கு ஒளி தான் அழகை கொடுக்கும். மின்விளக்குகள் அல்ல.

சில பெண்கள் விளக்கு ஏற்றும் போது கூட கைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டே ஏற்றுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. முழுக்க முழுக்க இறைவனை மனதில் நினைத்துக் கொண்டுதான் பூஜையில் விளக்கு ஏற்ற வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.

- Advertisement -

தரையில் சுத்தமான பாய் அல்லது மனப்பலகை போட்டு அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும். தவிர நியூஸ் பேப்பர், பழைய துணி இவைகளை போட்டு அமர்ந்து பூஜை செய்யக்கூடாது.

பூஜை அறையில் இறைவனுக்கு நிவேதியம் வைக்கக்கூடிய பாத்திரம் எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சின்ன பாத்திரமாக இருந்தாலும் சரி, அது நிரம்ப நெய்வேதியம் வையுங்க. மிகப்பெரிய பாத்திரத்தில் மிகக் குறைந்த அளவு நெய்வேதியம் வைத்து இறைவனுக்கு படைக்கக்கூடாது.

- Advertisement -

அதேபோல பூஜை அறையில் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் பஞ்ச பாத்திரம் உத்திரனி இருக்க வேண்டும். நெய்வேதியம் வைத்து தீபாராதனை காட்டிய பின்பு, பஞ்ச பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சாமிக்கு சமர்ப்பணம் செய்வது மிக மிக நல்லது.

இதையும் படிக்கலாமே: குபேரரின் அருள் பார்வை நேரடியாக உங்கள் மீது பட்டு, நீங்கள் செல்வ செழிப்புடன் வாழ உருளியில் இருக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் போதும்.

சாமி கும்பிடும் போது மணியை ரொம்பவும் வேகமாக அடித்து சாமி கும்பிட கூடாது. மணியை வலப்புறம் இடப்புறம் ஆட்டும் போது டங் டங் என ஓசை எழும்பும் அல்லவா, அந்த இரண்டு சத்தம் மட்டும் கேட்டால் போதும். தொடர்ந்து அதே போல மெதுவான சத்தத்தை எழுப்பி இறைவழிபாடு செய்யுங்கள். கோவிலில் குருக்கள் சுவாமிகள் நிவேதனம் வைத்து, ஆரத்தி காண்பிக்கும் போது அப்படி மெதுவாக தான் மணி அடிப்பார் கவனித்து பாருங்கள். மேல் சொன்ன இந்த ஆறு குறிப்புகளில் உங்களுடைய வீட்டில் நீங்கள் எந்த தவறை இதனால் வரை செய்திருந்தாலும் பரவாயில்லை. இனி திருத்திக் கொள்வதன் மூலம் நன்மையே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -