வீட்டில் தினந்தோறும் பூஜை செய்யும்போது, மணியடித்து சாமி கும்பிட்டால் வேண்டுதல் பளிக்காதா?

poojai
- Advertisement -

தினந்தோறும் நம்முடைய வீட்டு பூஜை அறையில் சுவாமி கும்பிடும் போது, மணி சத்ததை ஒலிக்க விட்டு சாமி கும்பிடுவது சரியா? தவறா? இந்த மணியை வீட்டில் ஒலிக்க செய்யலாமா அல்லது கோவில்களில் மட்டும் தான் மணியாட்டி சுவாமி கும்பிட வேண்டுமா? மணியாட்டி சுவாமி கும்பிடுவதில் மறைந்துள்ள சூட்சம ரகசியம் தான் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாமா? இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுடைய மனதிலும் எழுந்திருந்தால், உங்களுடைய வீட்டில் மணியாட்டி சாமி கும்பிட கூடாது என்று யாராவது உங்களுக்கு சொல்லி இருந்தால், இந்த பதிவை படித்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

mani

முதலில் நம்முடைய வீட்டில் மணியாட்டி சுவாமி கும்பிடுவதில் எந்த ஒரு தவறும் கிடையவே கிடையாது. தாராளமாக வீட்டில் பூஜை அறையில் சுவாமிக்கு தூபம் காட்டும் போது, நெய்வேத்தியம் செய்யும் போது, தீப தூப கற்பூர ஆரத்தி காட்டும்போது, மணி அடித்துக்கொண்டே இறைவனை வழிபாடு செய்யலாம். நீங்கள் மணியின், மேல் பக்கத்தில் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். அதாவது பெரும்பாலும் எல்லா மணிகளிலும் நந்தி பகவானின் உருவமானது பதிக்க பட்டிருக்கும்.

- Advertisement -

எம்பெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்தியின் செவிகளில் சொன்னால், அந்த வேண்டுதல்களை நந்தி பகவானே எம்பெருமானின் செவிகளுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடுவார் என்பது தான் ஐதீகம். இந்த மணியை உங்களது கைகளில் வைத்துக்கொண்டு, அந்த மணியின் ஓசையை எழுப்பி, உங்களது வேண்டுதல்களை வைத்துக் கொண்டு, இறை வழிபாட்டை செய்தால் உங்களுடைய வேண்டுதல்களை நந்தி பகவான் இறைவனிடம் கொண்டு போய் சேர்பார் என்பதும் சாஸ்திரம்.

mani1

உங்கள் வீட்டு பூஜை அறையில் மந்திரங்களை உச்சரிக்கும் போதும், சுவாமியின் பாடல்களைப் பாடும்போது அல்லது தெய்வப் பாடல்களை ஒலிக்கவிட்டு கொண்டிருக்கும் போது, கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து இறைவனிடம் கோரிக்கைகளை வைக்கும்போது, நமஸ்காரம் செய்யும் போது, மட்டும் மணி சத்தத்தை எழுப்ப வேண்டாம். மற்றபடி காலை பூஜை செய்யும் போதும், மாலை பூஜை செய்யும் போதும் மணியாட்டி வழிபட்டால் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

சமீபகாலமாக, வீட்டில் மணி அடித்து சாமி கும்பிடக் கூடாது என்பது சில பேரின் கருத்தாக இருந்து வருகிறது. அதாவது, மந்திரங்களை சொல்லி சுவாமிக்கு அர்ச்சனை செய்யும், புரோகிதர்கள், அர்ச்சகர்கள் மட்டும்தான், மணி சத்தத்தை எழுப்ப வேண்டும் என்றும், குறிப்பாக மணியானது கோவில்களில் மட்டும் தான் ஒலிக்கப்பட வேண்டும் என்பதும், சிலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம்.

poojai

இனி எந்த சந்தேகமும் மனக்குழப்பமும் தேவையில்லை. உங்களுடைய வீட்டில் இறைவனுக்கு பூஜை செய்யும் போது இனி மனத் திருப்தியோடு மெல்லிய ஓசையோடு, உங்கள் வீட்டு மணியை ஒலிக்கச் செய்து இறைவனிடம் மனதார பிரார்த்தனை வைத்து பூஜை செய்யலாம். உங்களது பிரார்த்தனை அந்த இறைவனிடம் நேராகப் போய் சேர்வதற்கு இந்த மணியின் ஒலி சத்தமும் காரணமாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை உண்மையில் முறையாக இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -