பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது. இந்த தவறை செய்தால் வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

poojai
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பூஜை அறை கோவிலை போன்றது. அப்படிப்பட்ட புனிதமான தெய்வங்கள் வாழக்கூடிய அந்த இடத்தில் நம்மை அறியாமலேயே நாம் சில தவறுகளை செய்து விடுகிறோம். அந்த தவறுகள் நம்முடைய குடும்பத்திற்கு கஷ்டத்தை கொண்டு வந்து விடுகின்றது. நம்மை அறியாமல் பூஜை அறையில் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன. உங்கள் வீட்டு பூஜை அறையில் நீங்கள் இந்த தவறை செய்கிறீர்களா என்று பாருங்கள். இதுநாள்வரையில், இந்த தவறுகளை செய்து இருந்தால், இனி திருத்திக் கொள்வது நல்லது. உங்கள் குடும்பத்திற்கு எதிர்பாராத கஷ்டங்களை கொடுக்கக்கூடிய அந்த தவறுகள் என்னென்ன பார்த்து விடலாமா.

milk-boiling-stove

பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. அப்படி அந்த நைவேத்திய பொருட்களில் காய்ச்சிய பாலை வைத்து, பூஜை செய்வது சில பேருடைய பழக்கமாக இருக்கும். இப்படி இறைவனுக்கு காய்ச்சிய இனிப்பு சேர்த்த பாலை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்வது நல்லது தான். இறைவழிபாடு செய்து முடித்து விட்டு, அந்த பாலை கொஞ்ச நேரத்திலேயே எடுத்து பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் குடித்துவிட வேண்டும்.

- Advertisement -

சில பேர் வீடுகளில் நிவேதனமாக பாலை பிரசாதமாக வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் அந்த பாலை எடுக்க மறந்துவிடுவார்கள். பால் பூஜை அறையிலேயே இருந்து கெட்டுப் போய்விடும். இது மிகவும் தவறான ஒரு செயல். பூஜை அறையில் இறைவனுக்கு பிரசாதமாக வைக்கப்பட்ட அந்த பால் பூஜை அறையிலேயே கெட்டுப் போகவே கூடாது. குறிப்பாக கெட்டுப் போய் அதில் ஒரு புளித்த வாடை வீசும். அந்த வாடை பூஜைஅறையில் வரவே கூடாது.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பால் பூஜையறையில் கெட்டுப் போகும் படி விட்டு விட்டால், அது நம்முடைய வீட்டில் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணி விடும். வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் வரும். வறுமை தலை தூக்க ஆரம்பிக்கும். பின் வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலைமைக்கு கொண்டுபோய்த் தள்ளிவிடும். இறைவனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தின் வரிசையில் வெறும் பால் மட்டும் அல்ல, எந்த பிரசாதத்தை இறைவனுக்கு நிவேதனமாக வைத்தாலும் அதை உடனே எடுத்து நம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதே நல்லது.

- Advertisement -

சரி, இது நாள் வரை நீங்கள் இந்த தவறை அறியாமல் செய்திருந்தால் பிரச்சனை இல்லை. இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இனி உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய குடும்பத்திற்கும் நல்லது. அடுத்தபடியாக, பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை உங்களுடைய வீட்டில் எப்படி குளிர வைப்பீர்கள்.

poojai arai

பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் தீபச்சுடரை பூவை வைத்து தான் மலை ஏற்றுவார்கள். இப்படி செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும் கல்கண்டை வைத்து தீபத்தை மலை ஏறினால் அது நம் வீட்டிற்கு செல்வச் செழிப்பை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

vilakku-deepam

பூஜை அறையில் தீபத்தை குளிர வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கட்டி கல்கண்டை வாங்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் ஒரே கற்கண்டை வைத்து விளக்கைக் குளிர வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி, வீட்டில் இருக்கும் வறுமையை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -