பூஜை பாத்திரங்களை இப்படி மட்டும் சுத்தம் செய்து பாருங்க. இனி அடிக்கடி பூஜை பாத்திரம் தேய்க்க வேண்டுமே என்ற கவலையே வராது. ஒரு மாதம் ஆனால் கூட பூஜை பாத்திரங்கள் தகதகவென்று ஜொலிக்க அருமையான டிப்ஸ்.

poojavessels
- Advertisement -

பூஜை பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்ய பல வழிமுறைகள் இருந்தாலும் கூட, நாம் சுத்தம் செய்த ஒரு வாரம் வரை பளிச்சென்று இருக்கும். அதன் பிறகு எண்ணெய் பிசுக்கு படிந்து விளக்கு முழுவதும் பச்சை பச்சையாக மாறி பார்க்கவே நன்றாக இருக்காது. இந்த முறையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்தால் ஒரு மாதம் ஆனால் கூட, அப்போது தான் தேய்த்து வைத்த பாத்திரம் போல பளிச்சென்று இருக்கும் வாங்க அதை என்ன என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்வது எப்படி
பூஜை பாத்திரங்களை எல்லாம் முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து நன்றாக துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய உப்பு தண்ணீரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் உப்பு தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் கூட, அது உடனே கருத்து விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இப்போது ஒரு சிறிய பௌலில் இரண்டு டேபிள் ஸ்பூன் சால்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு இத்துடன் ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து நன்றாக கரைத்து அந்த பேஸ்டையும் இதில் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறையும் கலந்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான பேஸ்ட் தயாராகி விட்டது.

இப்போது பூஜை பாத்திரங்களின் மீது இந்த பேஸ்ட்டை தேய்த்து விட்டு ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதன் சாறு முழுவதும் பூஜை பாத்திரங்களின் மீது நன்றாக ஊறட்டும். அதன் பிறகு நீங்கள் லேசாக தேய்த்தாலே போதும் விளக்குகள் எல்லாம் பளிச்சென்று மாறி விடும். இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை தேய்க்க மட்டும் பிரஷ்சை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .இதற்கு புதிதாக உள்ள டூத் பிரஷை தான் பயன்படுத்த வேண்டும். நாம் ஏற்கனவே பயன்படுத்தியதை பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இதையெல்லாம் தேய்த்த பிறகு சுத்தமான தண்ணீரில் பூஜை பாத்திரங்களை எல்லாம் நன்றாக அலசி ஒரு காட்டன் துணியை வைத்து பூஜை பாத்திரங்களை சுத்தமாக துடைத்து விட்டு வெயிலில் ஐந்து நிமிடம் வரை வைத்து எடுத்து விடுங்கள். இந்த முறையிலே பூஜை பாத்திரங்கள் நல்ல பளிச்சென்று மாறி விடும். இவை அதிக நாட்கள் கருகாமல் இருக்க இந்த குறிப்பையும் பயன்படுத்தி பாருங்கள்.

இதற்காக நாம் வீட்டில் வைத்திருக்கும் விபூதியை எடுத்து இந்த விளக்குகளின் மீது லேசாக தேய்த்த பிறகு மறுபடியும் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து கொடுங்கள். இப்படி செய்வதனால் பூஜை பாத்திரங்கள் எல்லாம் பாலிஷ் செய்தது போல பளபள வென்று இருக்கும். அதே நேரத்தில் சீக்கிரத்தில் கருமை அடையாமலும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பல நாள் கஷ்டப்பட்டு செய்யிற வேலைகளை எல்லாம் பத்தே நிமிஷத்துல செஞ்சு முடிக்க நீங்க வேண்டாம்னு தூக்கி போடுற இந்த ஓரு பொருள் இருந்தா போதும். வாங்க அப்படி என்ன சீக்ரட்டான டிப்ஸ்ன்னு பார்க்கலாம்.

இந்தக் குறிப்பு அனைத்து இல்லத்தரசிகளுக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் எப்படி தேய்த்தாலுமே பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று ஆவதில்லை. அப்படியே இருந்தாலும் உடனே கருத்து விடுகிறது என்ற கவலை அனைவருக்கும் உண்டு. இந்த டிப்ஸ் எல்லாருக்கும் ரொம்பவே உபயோகமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -