அட ! அது எப்படிங்க இந்த தண்ணியில பத்து நிமிஷம் பூஜை பாத்திரங்களை ஊற வச்சா பளிச்சுன்னு மாறிடுமா.? ஆமாங்க இது வரைக்கும் யாரும் கேள்விப்படாத இந்த புது டெக்னிக்கை நீங்களும் தெரிஞ்சி வைச்சிக்கோங்க.

pooja vessels Cleaning tips
- Advertisement -

பூஜை பாத்திரங்கள் எப்போதும் பளிச்சென்று இருந்தால் பார்க்க அழகாக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், அப்படி இருக்கும் போது விளக்கு ஏற்றி வைத்து சிறிது நேரம் நாம் அமர்ந்தாலே போதும் மனம் லேசாகி பரவசமாகி விடும். இந்த பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று இருப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பளிச்சென்று ஆக்க நாம் எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது தான் இப்பொழுது பிரச்சனையே.

இந்த பூஜை பாத்திரங்களை நாம் என்ன தான் தேய்த்து சுத்தப்படுத்தி வைத்தாலும் ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே அதன் நிறம் கருமை அடைந்து பார்க்கவே நன்றாக இருக்காது. அந்த நேரத்தில் நமக்கே கூட விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று தோன்றாது. இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை அதிக சிரமம் இல்லாமல் அதே நேரத்தில் ஒரு முறை தேய்த்தால் அடிக்கடி தேய்க்க வேண்டிய அவசியம் இல்லாமலும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை சுலபமாக சுத்தப்படுத்த:
பொதுவாக பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்த நாம் நிறைய வழிமுறைகளை பற்றி தெரிந்திருப்போம். அதில் இப்போது தெரிந்து கொள்ளப் போவது மிகவும் புதியதான வழி முறை தான். இதற்கு முதலில் பூஜை பாத்திரங்களை எல்லாம் எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து எண்ணெயை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

அதன் பிறகு உங்கள் பூஜை பாத்திரங்கள் எவ்வளவு உள்ளதோ அது முழுவதுமாக போடும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் முக்கால் பாகம் வரை தண்ணீர் ஊற்றுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் சால்ட் போட்டுக் கொள்ளுங்கள். இது அனைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த லெமன் சால்ட் உடன் ஒரு அரை டீஸ்பூன் விம் லிக்விட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் எந்த லிக்விடையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இரண்டையும் நன்றாக கலந்த பிறகு அந்த தண்ணீரில் உங்களுடைய பூஜை பாத்திரங்களை எல்லாம் போட்டு பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு ஒரு சாதாரண ஸ்கிரப்பர் அல்லது தேங்காய் நார் கொண்டு பூஜை பாத்திரங்களை தேய்த்தால் பளிச்சென்று மாறி விடும். நீங்கள் தண்ணீரில் போடும் போதே பூஜை பாத்திரங்களில் நிறம் மாறி விடும்.

அப்படியும் ஒரு சில பாத்திரங்களின் இடுக்குகளில் அழுக்குகள் சேர்ந்திருக்கும் அதை சுத்தம் செய்ய தான் இந்த நார் வைத்து தேய்க்கும் முறை. இதன் பிறகு சுத்தமான தண்ணீரில் ஒரு முறை இந்த பாத்திரங்களை கழுவிய பிறகு காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்த பின் சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலுக்கு மாவை எப்படி அரைச்சாலும் புளிஞ்சு போயிடுதா? வாயில வைக்க முடியாத அளவுக்கு புளிச்ச மாவை கூட அரை மணி நேரத்தில் புளிப்பே தெரியாம ஈசியா மாத்திடலாம். எப்படிடா? அப்படின்னு யோசிக்கிறீங்களா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இந்த முறையில் பித்தளை பாத்திரங்கள் மட்டுமல்ல செம்பு பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் இந்த எளிமையான வழிமுறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -