பூஜை பாத்திரங்கள் ஒரு மாதம் ஆனாலும் நிறம் மாறாமல் பளிச்சென்று இருக்க இந்த ஒரு பொருள் போதும்.

pooja vessels
- Advertisement -

வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் முதலில் நம் கவனத்திற்கு வருவது பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான். ஒவ்வொரு முறை பூஜை செய்யும் போதும் நாம் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு தான் வழிபடுவோம். இதற்கு காரணம் ஒரு முறை சுத்தம் செய்த பிறகு முறை பூஜை செய்வதற்குள் பூஜை பாத்திரங்கள் கருப்படைந்து போவது தான். இப்படி கறுப்படைந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதே பெரிய வேலையாக தோன்றும்.

அதற்காக கறுப்படைந்த பூஜை பாத்திரங்களை அப்படியே வைத்து வழிபட முடியாது. அப்படி வழிபடவும் கூடாது. அப்படி வழிப்பட்டால் பூஜையை பலனில்லாமல் போய் விடும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை எளிதாக எப்படி சுத்தம் செய்வது என்பதையும், சுத்தம் செய்த பூஜை பாத்திரங்கள் ஒரு மாதம் வரை கருக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்து ஒரு மாதம் வரை நிறம் மாறாமல் இருக்க

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பு அதில் இருக்கும் எண்ணெய் திரி போன்றவற்றையெல்லாம் தனியாக எடுத்து விட்டு ஒரு டிஷ்யூ பேப்பரோ அல்லது காட்டன் துணியோ வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள்.

அதன் பிறகு ஒரு தட்டில் பீதாம்பரி பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சமாக கோலமாவையும் சேர்த்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு கலந்த இந்த பவுடரை எடுத்து பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து எலுமிச்சை பழத்தோலை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

இப்படி தேய்க்கும் போதே பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று நிறம் மாற ஆரம்பிக்கும். அப்படியும் காமாட்சி விளக்கு போன்ற ஒரு சில பூஜை பொருட்கள் இடுக்குகளில் கொஞ்சம் அழுக்கு இருப்பது போல தோன்றினால் பிரஷ் வைத்து தேய்த்து விடுங்கள். பூஜை பாத்திரங்களை தேய்ப்பதற்கு என எப்போதும் தனியாக ஒரு டூத் பிரஷை வாங்கி வைத்து விடுங்கள்.

இப்படி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு பாத்திரங்களை கழுவிய பிறகு ஒரு காட்டன் துணியில் ஈரம் போக துடைத்து வீட்டில் உள்ள பேன் காற்றில் ஆற விடுங்கள் வெயிலில் வைத்தால் கூட சில நேரங்களில் பூஜை பாத்திரங்கள் கருத்து விடும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படிக்கலாமே: மழைக்காலத்திற்கு ஏற்ற அருமையான டிப்ஸ்

இப்போது தேய்த்த பூஜை பாத்திரங்களின் மீது கொஞ்சமாக விபூதி சேர்த்து டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக துடைத்து விட்டால் போதும். பூஜை பாத்திரங்கள் மேலும் பளிச்சென்று மாறி விடும். அதுமட்டுமின்றி இப்படி செய்யும் போது ஒரு மாதம் ஆனால் கூட அப்போது தான் தேய்த்து வைத்தது போலவே பூஜை பாத்திரங்கள் மின்னும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -