மழைக்காலத்திற்கு ஏற்ற அருமையான டிப்ஸ்

clothes drying matt
- Advertisement -

மழை எப்பொழுதுமே அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒரு அழகான விஷயம் தான். ஆனால் இந்த மழைக்காலத்தில் எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய பல வேலைகளை இல்லத்தரசிகள் சமாளிக்க வேண்டியதாக இருக்கும். அதுவும் குறிப்பாக இந்த துணிகளை துவைத்து காய வைத்து எடுப்பது பெரும் சவாலான வேலை என்றே சொல்லலாம். இந்த டிப்ஸை நீங்க தெரிந்து கொண்டால் இந்த மழைக்காலத்தை சுலபமாக சமாளித்து விடலாம். வாங்க அது என்ன டிப்ஸ் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மழைக்காலம் வந்து விட்டாலே முதலில் ஏற்படக் கூடிய மிகப்பெரிய பிரச்சனை துணிகளை காய வைப்பது தான். இந்தப் பிரச்சினையை சமாளிக்க பாத்திரம் தேய்த்ததும் போட்டு வைக்கும் கூடையை தலைகீழாக வைத்து இரண்டு புறமும் கம்பி வைத்து கட்டி விடுங்கள். அதன் பிறகு அந்த கூடையில் சுற்றி உள்ள துளைகளில் துணி போடும் ஆங்கர்களை தொங்க விட்டு அதில் துணிகளை காய வைத்தால் ஒரே நேரத்தில் அதிக துணிகளை காய வைக்கலாம் இடமும் அடைக்காது ஈர வாடையும் அடிக்காது.

- Advertisement -

இதே போல நம் அனைவர் வீட்டிலும் கட்டப்பை நிச்சயமாக இருக்கும் அந்த பை கிழிந்து விட்டால் மேலிருக்கும் கட்டைகளை தூக்கி தூர போட்டு விடுவோம். அப்படி இல்லாமல் அந்த கட்டையின் இரண்டு புறமும் கயிறு கட்டி தொங்க விட்டு அதில் ஹேங்கர்களை போட்டு துணிகளை தொங்க விடலாம். இதற்கு கட்டப்பையில் உள்ள கட்டை மட்டும் தான் தேவை என்று இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பைப் போன்றவற்றை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி வீட்டு ஜன்னல்களின் ஸ்கிரீனுக்காக போட்டிருக்கும் கம்பிகளில் கூட ஆங்கர்களை தொங்க விட்டு அதில் துணியை காலில் போடலாம். மேலும் துணிகளை காய வைக்க இன்னொரு சுலபமான வழியும் உள்ளது. அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு பழைய துணியை கிழித்து நீளமாக கட்டி கொள்ளுங்கள். அதன் இரு முனைகளிலும் துளைகள் இருப்பது போல் முடிச்சு போட்டு அதில் பழைய வலையல்களை S வடிவில் கொக்கி போல மாட்டி அதை இரண்டு ஜன்னல் கம்பிகளில் இணைத்து கொடி போல கட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த துணியால் ஆன கொடியில் ஹங்கர்களை தொங்க விட்டு அதில் துணிகளை காய வைத்தால் எத்தனை துணிகளை வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் காய வைக்கலாம். இதனால் சுவற்றில் ஆணி அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில நேரங்களில் ஆங்கர் கூட பயன்படுத்த தேவையில்லை இந்த துணியிலேயே கூட துணிகளை காய வைத்து விடலாம். ஹேங்கர் இல்லையென்றாலும் கூட இந்த துணியாலான கொடியிலே துணியால் ஆன வைக்கலாம்.

மழைக்காலத்தில் அதிகம் துவைக்க சிரமப்படுவது கால்மிதியடி தான். இதை துவைப்பதும் கடினம் எளிதில் காயவும் காயாது. அதே நேரத்தில் மழைக்காலத்தில் தான் இதை அதிகமாக பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். மேட் அப்படி சீக்கிரத்தில் ஈரம் ஆகாமல் இருக்க மேட்டுக்கு அடியில் ஏதாவது கார்ட்போர்களை போட்டு வைத்து விடுங்கள். அப்படி இல்லாமல் இந்த ஐடியாவும் நீங்கள் பயன்படுத்தலாம். உங்களின் மேட்டின் மேல் முழுமையாக நாப்கின்களை ஒட்டி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு இந்த மேட்டை தலைகாணி உறையில் போட்டு அதை வாசலில் போட்டு விடுங்கள். மழையில் நனைந்து வரும் போது மேட்டில் கால் வைக்கும் போது ஈரம் அனைத்தையும் நாப்கின் எடுத்துக் கொள்ளும். அதன் அடியில் இருக்கும் மேட் ஈரம் ஆகவே ஆகாது. தலையணை உறையை மட்டும் துவைத்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: கற்பூரத்தை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இல்லத்தரசிகள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான் இது.
இதற்காக அதிகம் நாப்கின் செலவாகுமே என்று யோசிக்க வேண்டாம். மழைக்காலத்தில் துணிகள் ஈரமாகி அதை அடிக்கடி துவைத்து செய்யும் வேலையை விட இது உங்களுக்கு சுலபமாக இருக்கும். இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைத்தால் நீங்கள் இதை பயன்படுத்தி பலன் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

- Advertisement -