வீட்டிலிருக்கும் பூஜை பொருட்கள் இப்படி இருந்தால் வேண்டிய வேண்டுதல் பலிக்காது தெரியுமா? பூஜை பொருட்கள் எப்படி இருக்க கூடாது? எப்படி இருக்க வேண்டும்?

pooja-items-lakshmi
- Advertisement -

அனுதினமும் வீட்டில் பூஜை செய்பவர்கள் அதை முழுமனதோடு மனம் ஒருமுகப்படுத்தி இறை நெறியுடன் செய்வது அவசியமாகும். எந்த ஒரு வேண்டுதலும் பலிக்க வேண்டுமென்றால் நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூஜைக்கு உரிய பொருட்கள் அத்தனையும் ஒரே உலோகத்தால் இருப்பது அல்லது குறிப்பிட்ட உலோகங்களால் இருப்பது அவசியமாகும். இப்படி பூஜைக்குரிய பொருட்கள் எப்படி இருக்க கூடாது? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பூஜைக்குரிய பொருட்கள், பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் உலோகங்களால் ஆனதாக இருக்க வேண்டும். அது பித்தளை மற்றும் வெள்ளி ஆகிய இந்த உலோகங்களால் செய்யப்பட்டதாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பித்தளை மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் இறை சக்தியை நமக்கு முழுமையாக, பரிபூரணமாக கொடுக்கக் கூடிய உலோகங்கள் ஆக இருக்கின்றன. இவ் உலோகங்களை தவிர மற்ற உலோகங்களை நீங்கள் பயன்படுத்தினால் அதனால் வர கூடிய விளைவுகள் எதிர்வினையாக இருக்கக் கூடும். எனவே பூஜை பொருட்கள் யாவும் பித்தளை அல்லது வெள்ளியால் ஆனதாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து அனுப்பும் பொழுது தங்கள் வசதிக்கு ஏற்ப மணமகள் வீட்டார் பித்தளை பூஜை பொருட்கள் அல்லது வெள்ளி பூஜை பொருட்கள் மட்டுமே கொடுத்து அனுப்புவார்கள். எனவே வேறு உலோகங்கள் அதாவது இரும்பு அல்லது எவர்சில்வர் போன்ற பொருட்களை பூஜைக்கு கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. செம்பினால் ஆன பூஜை பொருட்கள், குறிப்பாக கலசங்களை பயன்படுத்துவது ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும்.

இரும்பினாலான பொருட்கள் சனி பகவானுக்கு உரியதாக இருக்கின்றது. எனவே இரும்பினாலான பூஜை பொருட்களை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். தூபக்கால், ஊதுபத்தி ஸ்டாண்ட், மணியடிக்கும் பூஜை மணி போன்றவையும் இரும்பினால் ஆனதாக இருக்க கூடாது. இதை கவனித்து வாங்குவது அவசியம் ஆகும். பூஜை பொருட்களில் ஒரு சில பொருட்கள் மட்டும் வேறு உலோகத்தில் பயன்படுத்தலாமா? என்று கேட்டால் அதையும் செய்யக்கூடாது.

- Advertisement -

சிலர் ஊதுபத்தி ஸ்டாண்ட் போன்றவற்றை இரும்பினால் அல்லது எவர்சில்வர் போன்ற உலோகங்களால் வைத்திருப்பதை பார்த்து இருப்போம், இவ்வாறு செய்யக்கூடாது. வசதியில்லாதவர்கள் மண் கலவையால் செய்யப்பட்ட பூஜை பாத்திரங்களை தாராளமாக பயன்படுத்தலாம். இயற்கையாக கிடைக்கக் கூடிய மண்ணால் செய்யப்பட்ட பூஜை பொருட்கள் ரொம்பவே சக்தி வாய்ந்தது எனவே பித்தளை மற்றும் வெள்ளி பொருட்களை விட, மட்பாண்ட பொருட்களுக்கு ரொம்பவே இறை சக்தியை கிரகிக்கும் ஆற்றல் உண்டு, எனவே முடிந்த மட்டும் மண் பொருட்களை பயன்படுத்தலாம் அல்லது மேற்கூறியபடி இந்த இரண்டு உலோகங்களைப் பயன்படுத்தி பூஜை செய்யலாம்.

இப்போதெல்லாம் மண்ணால் செய்யப்பட்ட பூஜை பொருட்கள் விதவிதமான அலங்காரங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இவை எல்லாம் இறை சக்தியை அதிகமாக ஈர்க்கக் கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். கற்பூர தீபம் காண்பிக்கும் தூபக்கால் கண்டிப்பாக பித்தளையால் இருப்பது அவசியமாகும். தீப ஜோதியில் ஒளிரும் இறைசக்தியை கிரகிக்கும் ஆற்றல் பித்தளைக்கு உண்டு. எனவே எக்காரணம் கொண்டும் வேறு உலோகங்களில் இதை பயன்படுத்த வேண்டாம், பித்தளையால் பயன்படுத்துங்கள். இது போல நீங்கள் பூஜை பொருட்களை வைத்து இருந்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்களும் தடையில்லாமல், எதிர்வினை ஆற்றாமல் முழுமையாக இறைசக்தியை அடையலாம்.

- Advertisement -