வீட்டின் பூஜை அறையை ஒரு முறை இவ்வாறு சுத்தம் செய்து பாருங்கள். லட்சுமி கடாட்சம் பெருகி, ஐஸ்வர்யம் உண்டாகும்

poojai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமான இடமாக கருதப்படுவது அந்த வீட்டின் பூஜை அறை தான். இந்த பூஜை அறையில் தான் நமக்குத் தேவையான அனைத்து வேண்டுதல்களையும் கூறி இறைவனை மனதார பூஜை செய்கிறோம். அவ்வாறு வீட்டில் உள்ள அனைவரின் ஆழ்மனதில் உள்ள விஷயங்களும் இந்த பூஜை அறையின் முன் நின்று தான் வேண்டப்படுகிறது. அவை அனைத்தும் நிறைவேற முதலில் நமது பூஜை அறை லட்சுமி கடாட்சம் பொருந்தியதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை சுத்தமாக தான் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதைவிட அதை சுத்தி செய்வதில் கவனம் தேவை. சுத்தி செய்வதென்பது ஒரு பொருளை புனிதமானதாக மாற்றுவதற்கு சமமாகும். அவ்வாறு நமது பூஜை அறையை புனிதமாக்க இந்த முறையில் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள். வாருங்கள் இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை முதல் நாள் அல்லது செவ்வாய்க்கிழமை முந்தைய நாள் பூஜை அறையில் பூஜை பொருட்களை சுத்தம் செய்வது வீட்டில் உள்ள பெண்களின் வழக்கமான செயலாகும். ஆனால் இப்படி சுத்தம் செய்தால் மட்டும் போதாது. எப்படி மற்றவர்கள் கண் பார்வை நமக்கு திருஷ்டியை கொடுக்கிறதோ, அதற்காக நமக்கு சுற்றி போட்டு கொள்கிறோமோ அதுபோல பூஜை அறையும் சுத்தி செய்யவேண்டும்.

- Advertisement -

அதாவது நமது வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நாளும் பலவித மனிதர்கள் வந்து போக வேண்டிய அவசியம் ஏற்படும். இப்படி வீட்டிற்கு வருபவர்களின் கண் பார்வையில் நமது பூஜை அறை இருந்திருக்கும். அப்பொழுது மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்கள் நமது வீட்டை சூழ்ந்து கொள்வதால் இந்த எதிர்மறை சக்திகள் நம்மை பாதிக்காமல் இருக்க நமது பூஜை அறையில் இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் அவற்றைத் தடுத்து நிறுத்துகின்றன.

இப்படி தெய்வங்களின் சக்தி இது போன்ற எதிர்மறை எண்ணங்களினால் சற்று அழுக்குப் படிந்துவிடும். கண்ணுக்கு தெரிகின்ற அறிக்கை கைகளால் சுத்தம் செய்து விடலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த அழுக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால் அங்கு லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படும். ஆகையால் லட்சுமி கடாட்சம் பெருக பூஜை அறையை சுத்தி செய்ய வேண்டும்.

- Advertisement -

அதற்கு ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 5 ஏலக்காய்களை இடித்துச் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய துணியை எடுத்து, அதனை இந்த தண்ணீரில் நனைத்துக் கொண்டு, இந்த துணியினால் பூஜை அறை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் உள்ள படங்கள், விக்ரகங்கள், பூஜை அறை பொருட்கள் என அனைத்தையும் துடைத்து விட வேண்டும். அவ்வாறு மீதமிருக்கும் தண்ணீரை வைத்து வீடு முழுவதும் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்ஷ்மி கடாட்சம் பெருகி, ஐஸ்வர்யம் உண்டாகும்.

- Advertisement -