கோவில்களில் ஏற்றப்படும் விளக்குகள் ஜொலிக்க காரணம் இதுதானா? இதோ உங்கள் வீட்டு விளக்கும் ஜொலிக்க அந்த ரகசிய குறிப்பு.

- Advertisement -

நாம் கோவில்களுக்கு செல்லும் போது அங்கே தெய்வங்களுக்கு தீபாராதனை விளக்குகள் ஏற்றி வைத்து இருக்கும் பூஜை பொருட்களை பார்த்திருப்போம். அதில் இருந்து வரும் ஒளியைப் போலவே அந்தப் பொருட்களும் அத்தனை பிரகாசமாக மின்னிக் கொண்டு இருக்கும். அப்படி பார்க்கும் போதே நமக்குள் ஒரு பக்தி பரவசம் வந்து விடும். பூஜை பாத்திரங்களை சுத்தமாக பள பளவென்று வைத்திருப்பதற்கான காரணமும் அது தான். அந்த தங்கம் போல் மின்னும் மினுமினுப்பை பார்த்த உடனே நமக்குள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி இல்லாமல் கருமை படிந்து எண்ணெணை படிந்த விளக்குகளாக வைத்திருந்தோம் என்றால் அதில் தீபம் ஏற்றி வணங்கவே தோன்றாது. விளக்குகளை சுத்தமாக பளிச்சென்று வைத்திருப்பதற்கான அடிப்படை காரணம் இது தான்.

இதனால் தான் பெரிய பெரிய கோவில்களில் விளக்குகள் எப்போதும் தங்கத்தை விட மின்னும் படி வைத்திருப்பார்கள். இனி அதே போல் உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்குகளையும் மின்ன செய்யலாம் வாங்க அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை எடுத்து ஒரு காட்டன் துணி வைத்து எண்ணெய் பிசக்கில்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சாம்பிராணி ஏற்றிய பிறகு கிடைக்கும் அந்த பவுடர் எடுத்து கொள்ளுங்கள். (அதாவது கப் சாம்பிராணி ஏற்றுவோம் அல்லவா அது எரிந்து முடிந்ததும் அதனுடைய துகள்கள் இருக்கும் அதை நீங்கள் சேகரித்து வைத்துக் எடுத்து கொள்ளுங்கள்)

இத்துடன் அரை லெமன் சேர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் எலுமிச்சை பழம் இல்லாத சமயத்தில் அதற்கு பதிலாக தக்காளியையும் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் நான்கு சின்ன கற்பூரத்தை எடுத்து பவுடர் செய்து அதையும் இந்த சாம்பிராணி பவுடரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடைசியாக சாதம் வடித்த கஞ்சி ஒரு அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். இது விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்கு எல்லாம் நீக்கி விடும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நல்ல பேஸ்ட் போல குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் தேங்காய் நாரை தொட்டு தேய்த்து கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் விட பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய தேங்காய் நார் உதவியாக இருக்கும். ஏனென்றால் காமாட்சி அம்மன் விளக்கு போன்றவற்றை சிறு சிறு இடுக்குகள் எல்லாம் கூட இந்த தேங்காய் நாரை பயன்படுத்தி தேய்க்கும் போது சுத்தமாகி விடும். இப்படி தேய்த்த விளக்குகளை நல்ல தண்ணீர் கொண்டு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சில்வர் வாட்டர் பாட்டிலில் கெட்ட வாடை வீசுதா? இந்த 1 பொருளை வாட்டர் கேனில் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வீசாது.

கழுவிய பூஜை பொருட்களை ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து விடுங்கள். இதை வெயிலில் காய வைக்க வேண்டாம். ஏனெனில் வெயிலில் காய வைக்கும் போது எங்காவது ஓரிடத்தில் தண்ணீர் இருந்தால் கூட அது கருப்பாக படிந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே நீங்கள் பூஜை பாத்திரங்களை கழுவி முடித்தவுடன் காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து விட்டால் போதும். பூஜை பாத்திரம் தங்கம் போல் மின்ன ஆரம்பித்து விடும். இந்த முறையில் நீங்கள் தேய்த்தால் இரண்டு மாதம் வரையில் கூட உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். இந்த முறையை உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -