நம்முடைய வீட்டில் தொடர்ந்து பூஜைகள் தடைபடுவதற்கு இதுவும்தாங்க ஒரு காரணம்! கட்டாயம் இதை எல்லோரும் தெரிஞ்சு வச்சுக்கணும்.

poojai
- Advertisement -

சில சமயங்களில் நம்முடைய வீட்டில் நாம் செய்துவரும் பூஜை புனஸ்காரங்களை தொடர்ந்து செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகள் வீட்டில் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை வரும். ஒரு நல்ல நாள் கிழமை என்று வந்தால் அந்த நாட்களில் நம் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இப்படி தொடர்ந்து நம் வீட்டில் பூஜை தடைபடுவதற்கு என்ன காரணமாக இருக்கும். நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் என்ன. என்பதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

poojai

இறைவனுக்கு இன்று நாம் பூஜை செய்கின்றோம் என்றால், அது நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட பாக்கியம். அந்த பாக்கியத்தை நினைத்து நாம் என்றுமே பூரித்துப் போகக்கூடாது. பெருமிதம் அடையக்கூடாது. இன்றைக்கு இறைவன் எனக்கு பூஜை செய்யக் கூடிய இந்த பாக்கியத்தை தந்துள்ளான் என்று இறைவனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘எப்படியோ இன்றைக்கான பூஜையை நாம் செய்து முடித்துவிட்டோம். இன்றைக்கான பூஜை நம்முடைய வீட்டில் சிறப்பாக நடந்தது’ என்று சந்தோஷப்பட்டு பெருமிதத்தோடு கர்வத்தோடு பூரிப்பு அடைய கூடாது.

- Advertisement -

நம்முடைய சந்தோஷம் நாம் நம்முடைய வீட்டில் சிறப்பாக பூஜை செய்துவிட்டு மென்று நம் மனதில் நினைக்கக் கூடிய இந்த பூரிப்பானது நம்முடைய பூஜைக்கு கண்திருஷ்டியை உண்டாக்கிவிடும். நம்முடைய கண் திருஷ்டியே, நம் வீட்டுப் பூஜை தடைபடுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும். இது முதல் காரணம். (இதற்காக பூஜை செய்துவிட்டு சந்தோஷப்பட கூடாது என்று சொல்லவில்லை. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கர்வத்தோடு பெருமிதம் கொள்ள கூடாது. ‘எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் இறைவன் செயல்.’ என்ற நினைப்பு நம் மனதிற்குள் வர வேண்டும் என்பதை இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.)

poojai

இது மட்டுமல்லாமல் இன்னும் சில பேர் தங்கள் வீட்டில் செய்த பூஜையை பெருமையோடு அக்கம் பக்கத்து வீட்டாரிடம் பகிர்ந்து கொள்வார்கள். ‘இன்று நான் மன நிறைவாக என்னுடைய வீட்டில் இறைவழிபாடு செய்தேன். எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.’ என்று தன் வீட்டில் செய்த பூஜையை பற்றி அடுத்தவர்களிடம் விமர்சிப்பது என்பது கூடவே கூடாது. இது அடுத்தவர்களுடைய கண்திருஷ்டியை நம் வீட்டு பூஜை அறைக்கு, நாம் செய்த பூஜைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிடும். பூஜை தடைபடுவதற்கு இது இரண்டாவது காரணம்.

- Advertisement -

மூன்றாவதாக, உங்கள் வீட்டிற்கு யார் வருகை தந்தாலும் அவர்களைக் கொண்டுபோய் உங்கள் வீட்டு பூஜை அறையை காண்பிக்க வேண்டாம். குறிப்பாக வெள்ளிக்கிழமை தினங்களில், விசேஷ நாட்களில் உங்களுடைய வீட்டில் பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்திருப்பீர்கள். அந்த சமயத்தில் வீட்டிற்கு வருகை தருபவர்கள் உங்கள் வீட்டு பூஜை அறைக்குள் சென்று பூஜையை அறையின் அலங்காரத்தை பார்த்து, அட இவர்கள் வீட்டு வெள்ளிக்கிழமை பூஜை இவ்வளவு அழகாக உள்ளதே, இதுபோல் நம்முடைய வீட்டில் பூஜை செய்ய முடியவில்லையே, என்று நினைத்தால் கூட அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

poojai arai

முடிந்த வரை மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களை தவிர்த்து கொண்டாலே போதும். உங்கள் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் தடைபடாது. இறைவழிபாடு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நமக்கு நடக்கும் நல்லது கெட்டதற்கு என்றைக்குமே நாம் காரணமில்லை. எல்லாம் அந்த இறைவனின் செயல் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -