இதனை செய்யாமல் மிகப்பெரிய யாகங்கள் செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. அவ்வாறு பூஜையின் பொழுது நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன

poojai
- Advertisement -

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட குணநலனாகும். அவ்வாறு ஒரு சிலர் 24 மணி நேரமும் தொடர்ந்து இறைவனை நினைத்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு சிலர் அனைத்து பூஜை சம்பந்தமான விஷயங்களையும் தவறாமல் தகுந்த நெறிமுறையுடன் செய்து வருவார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இறைவனை தங்களால் முடிந்தவரை எவ்வாறு வழிபட முடியுமோ அவ்வாறு மிகவும் இயல்பாக வழிபடுவார்கள். இவ்வாறு எந்த விதத்தில் இறைவனை வழிபட்டு வந்தாலும் அனைவரும் கூறும் ஒரு வார்த்தை, உன்னை பூஜிப்பதில் நான் என்ன குறை வைத்தேன்? எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகள் வருகின்றன? என்று தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் பூஜையின்போது செய்யக்கூடிய சிறு சிறு தவறுகளினாலே நாம் செய்யும் பூஜைக்கான பலன் நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai1

ஒரு சில வீடுகளில் பூஜை செய்வதாக இருந்தால் அன்று காலை முதல் மதியம் வரை பூஜைக்கான வேலையிலேயே மூழ்கி இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கூட காலையிலிருந்து பூஜை செய்யும் நேரம் வரை சாப்பிட உணவு எதுவும் கொடுக்காமல் வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இவ்வாறு செய்வது என்பது நம்மைப் பொறுத்தவரையில் மிகவும் சாதாரண விஷயமாக தான் இருக்கும். ஆனால் சிறியவர்கள் மற்றும் வயதானவர்களை பசியுடன் வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு பெரிய யாகங்கள், பூஜைகள் செய்தாலும் அதற்கான எந்தவித பலனும் நிச்சயம் நமக்கு கிடைப்பதில்லை. எனவே பூஜைக்கான நாட்களில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முதலில் சாப்பிடக் கொடுத்துவிட்டு அதன் பிறகே பூஜைக்கான வேளைகளை துவங்க வேண்டும்.

baby-eating

இன்று இருக்கும் பெண்கள் அனைவரும் இரவு உடையாக நைட்டியை தான் ஒரு நாள் முழுவதுமே அணிந்து கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பூஜை செய்யும் பொழுதும் அல்லது பூஜைக்கான வேலைகளை துவங்கும் பொழுதும் கூட இந்த இரவு உடையை அணிந்து கொண்டு தான் செய்கின்றனர். இவ்வாறு செய்தோம் என்றாலும் நிச்சயம் நாம் செய்யும் பூஜைக்கான பலன்கள் நமக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால் மாதவிடாய் நேரத்திலும், இரவு படுக்கையின் பொழுதும் நாம் அணிந்திருக்கும் இந்த உடையை என்னதான் சுத்தமாக துவைத்து அதன் பிறகு அதனை அணிந்து கொண்டாலும் அது இறை வழிபாட்டின்பொழுது உகந்த ஆடையாக இருக்காது.

- Advertisement -

அதேபோல் முழுமையும் கருப்பு நிறத்தில் இருக்கும் ஆடைகளை அணிந்து பூஜை செய்வது என்பதும் பூஜைக்கான பலனை கொடுத்திறாது. அது மட்டுமல்லாமல் நிறைய பெண்கள் இப்பொழுதெல்லாம் தலை பின்னி பூ வைப்பதைவிட தலைமுடியை விரித்து விடுவதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் பூஜை செய்யும் பொழுது நிச்சயம் ஜடை போட்டு பூ வைத்திருக்க வேண்டும். இறைவனுக்கு பூஜை செய்யும் பொழுது நாம் எந்த அளவிற்கு மங்களகரமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு பூஜையின் பலன் நமக்கு கிடைத்து விடுகிறது.

poojai

எனவே இறைவனுக்கு பூஜை செய்வதாக இருந்தால் காலை எழுந்து குளித்து விட்டு, அதன் பிறகு பூஜை வேளைகளை துவங்க வேண்டும். அதுபோல் கடவுள் நமக்காக கொடுத்திருக்கும் நல்ல உடைகளை அணிந்து கொண்டு, தலை பின்னி, ஜடை போட்டு, கையில் மருதாணி வைத்துக் கொண்டு எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் முழு மனதுடன் இறைவழிபாட்டை செய்தோம் என்றால் நமது கோரிக்கை நேரடியாக இறைவனை சென்றடைந்து அதற்கான முழுபலனும் கூடிய விரைவில் கிடைத்துவிடும்.

- Advertisement -