பூஜை செய்ததற்கான பலனை முழுமையாகப் பெற, லட்சுமி வசியம் ஏற்பட, ஐஸ்வர்யம் பெருக வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்து இனி இதையும் செய்யுங்கள்.

poojai-room
- Advertisement -

மனிதர்களாகிய நாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கும் போது தான் கண்திருஷ்டி படுமா என்ன? தெய்வங்களும் சந்தோஷமாக அலங்காரத்தோடு இருக்கும்போது, தெய்வங்களுக்கும் கண் திருஷ்டி படும். அதாவது வெள்ளிக்கிழமை பூஜை செய்யும்போது நம்முடைய பூஜைஅறை வழக்கத்தை விட பார்ப்பதற்கு புது பொலிவோடு அழகாக இருக்கும். சில சமயம் பார்க்கும் போது நமக்கே தோன்றும். நம்முடைய பூஜை அறையா இது என்று. இப்படி நம்முடைய கண்கள் ஒரு பக்கம் பூஜை அறையின் மேல்படும். வீட்டுக்கு வருகை தருபவர்கள் நம் வீட்டு பூஜை அறையை பார்த்து சில சமயம் கண் வைப்பதும் உண்டு.

இவர்கள் வீட்டு பூஜை அறை இவ்வளவு சிறியதாகத் தான் உள்ளது. ஆனால் எத்தனை அழகு. எத்தனை பொலிவு. இது போல நம் வீட்டில் பூஜை அறை அமையவில்லையே என்ற ஏக்கம். இப்படி எல்லாருடைய கண்களும் நம் வீட்டு சாமி அறையில் படும்போது ஒரு எதிர்மறையான விளைவுகளை உண்டு பண்ணி விடும். பூஜை செய்த பலனை முழுமையாக நமக்குக் கொடுக்காது.

- Advertisement -

உதாரணத்திற்கு இப்படிப்பட்ட சம்பவம் நடந்த அடுத்த இரண்டு அல்லது மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு நம் வீட்டின் பூஜை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். சில சமயம் வீட்டில் விளக்கு கூட வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். சில சமயம் பூஜை செய்யும் போது வீட்டில் சண்டை சச்சரவுகள் வெடிக்கும். இப்படிப்பட்ட கண் திருஷ்டியை போக்க நம் வீட்டிலேயே தெய்வ கடாட்சத்தை நிலை நிறுத்த, செய்த பூஜைக்கான பலனை முழுமையாகப் பெற, என்ன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை காலை எழுந்து பூஜை அறையை அலங்காரம் செய்வதற்கு முன்பாகவே, ஒரு சிறிய டம்ளரில் நல்ல தண்ணீரை ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு இந்த டம்ளரை பூஜை அறைக்கு பக்கத்தில் வைத்துவிடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய பூஜையை எப்போதும் போல செய்து முடித்து விடுங்கள். வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை எடுத்து பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும். கண்ணாடி டம்ளரை உங்கள் கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையை மூன்று முறை வலப்பக்கம், மூன்று முறை இடப்பக்கம், மூன்று முறை ஏற்றம் இறக்கமாக சுற்றி இந்த டம்ளர் தண்ணீரைக் கொண்டு போய் அப்படியே நிலை வாசலுக்கு வெளியே கொட்டி விடுங்கள்.

அவ்வளவுதான். வெள்ளிக்கிழமை நீங்கள் பூஜை செய்வதில் ஏதேனும் கண் திருஷ்டி அல்லது அடுத்தவர்களுடைய கெட்ட பார்வை விழுந்து இருந்தால் கூட அது உங்கள் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையையும் கொடுக்காது. உங்கள் வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிலையாக இருக்க, செய்த பூஜைக்கான பலனை முழுமையாகப் பெற, இந்த சிறு குறிப்பு உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -