பூஜை பாத்திரங்கள் கழுவும் பொழுது தவறியும் செய்யக்கூடாத தவறு என்ன? நைவேத்தியத்தை இப்படி மட்டும் படைக்கக் கூடாது தெரியுமா?

- Advertisement -

காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தினமும் வீட்டில் பூஜை செய்து வருபவர்களுக்கு எந்த விதமான தோஷங்களும், பாவங்களும் நெருங்குவதில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது போல இரு வேளையும் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுதல் என்பது சாத்தியமல்ல. அவசரமான இந்த உலகத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலையில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவே நேரம் இல்லாத பொழுது தினமும் பூஜை செய்வது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல.

ஆனால் அவ்வாறு செய்தால் நிச்சயம் உங்களுடைய குடும்பம் செழித்து வளரும். சரி, அப்படி செய்யாவிட்டாலும் பூஜை செய்யும் பொழுது இங்கு சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் நலம் தரும். அத்தகைய விஷயங்களில் பூஜை பாத்திரங்களை கழுவும் போது செய்யக்கூடாத ஒரு தவறு என்ன? நைவேத்தியத்தை எப்படி படைக்கக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை நீங்கள் திங்கள் மற்றும் வியாழன் கிழமையில் சுத்தம் செய்வது ரொம்ப நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் பூஜை செய்வது வழக்கம் எனவே அதற்கு முந்தைய நாளே பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யக் கூடாது. அன்றைய தினத்தில் வீட்டில் நெடி எடுக்கக்கூடிய எந்த சமையலையும் செய்யக்கூடாது என்கிற நியதியும் உண்டு.

மிளகாய் வறுப்பது, மிளகாய் தூள் அரைக்க மற்ற பொருட்களை வறுப்பது, மிளகாய்ப்பொடி மெஷினில் கொடுத்து அரைத்து வருவது, கண்ணீர் விடுவது, பால், தயிர், உப்பு போன்றவற்றை தானம் கொடுப்பது செய்யவே கூடாத விஷயங்கள் ஆகும். அது போல பூஜை பாத்திரம் கழுவும் பொழுது பூஜை பாத்திரங்களை வெறும் தரையில் வைத்து கழுவ கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, கற்பூர தீபம் ஏற்றும் தூபக்கால், ஊதுபத்தி ஸ்டாண்ட், குங்கும கிண்ணம் போன்ற எந்த ஒரு பூஜைப் பொருட்களையும் தாம்பூல தட்டு அல்லது ஏதாவது ஒரு தட்டில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்து சுத்தம் செய்து கழுவ வேண்டும். தரையில் வைக்கக்கூடாது.

- Advertisement -

கழுவிய பின்பு ஈரப்பதத்துடன் அப்படியே இருக்கவும் கூடாது. உடனே சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுத்து விட வேண்டும். அதன் பின்பு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை அறையில் அடுக்கி வைத்து விடலாம். ஆனால் விளக்கில் எண்ணெய் ஊற்றி வைப்பது, கற்பூரத்தை எடுத்து தயாராக வைப்பது போன்றவற்றை செய்யக் கூடாது. பூஜை செய்யும் போது தான் இந்த விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும். முன்கூட்டியே செய்து வைத்து இறைவனை காக்க வைக்கக் கூடாது என்கிற சாஸ்திரங்களும் உண்டு.

அது போல நெய்வைத்தியம் படைக்கும் பொழுது இலையில் வைத்து படைப்பது ரொம்பவே நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடியது. இலையில் நைவேத்திய பொருளை வைத்து அதன் கீழே பித்தளை, வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைத்து படைக்க வேண்டும். வெறும் தரையில் அப்படியே இலைகளை வைத்து நைவேத்யத்தை படைக்கக் கூடாது. அது போல நீங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திய எச்சில் பட்ட பாத்திரங்களையும் நைவேத்தியம் வைக்க பயன்படுத்தக்கூடாது. அதற்கென தனியாக நீங்கள் பூஜை தட்டை வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -