காரசாரமான இந்த பூண்டு தோசையை ஒரு வாட்டி, ட்ரை பண்ணி, டேஸ்ட் பண்ணி பாருங்க! இதைப் பார்க்கும் போதே சுட்டு சாப்பிடும் போல தோணுதா?

poondu-dosai
- Advertisement -

நாம் சமைக்கும் உணவு ருசியாக இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். சமைக்கின்ற பொருளை கண்களால் பார்க்கும் போதே, அதை நாம் வாய் ருசிப்பதற்கு தயாராக வேண்டும். அப்போதுதான் அதை சமைப்பவர்களுக்கு பெருமை. ஆங்கிலத்தில் பிரசன்டேஷன் என்று சொல்லுவார்கள் அல்லவா. இப்படி பார்ப்பதற்கு அழகாக இருக்கக்கூடிய, சுவைப்பதற்கு ருசியாகவும் இருக்கக்கூடிய ஒரு பூண்டு தோசை ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யம்மி யம்மி தோசையை ட்ரை பண்ண யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.

poonu-chutney2

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், தோல் உரித்த பூண்டு பல் – 20 லிருந்து 25, வரமிளகாய் – 7, தக்காளி நான்கு துண்டுகளாக வெட்டியது – 2, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, சீரகம் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த எல்லா பொருட்களையும் மிக்சியில் போட்டு 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, மைய பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்தபடியாக கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி அந்த எண்ணெய் காயட்டும் கடுகு – 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்து, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை நன்றாக கலந்துவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இதுதான் நாம் தோசையின் மேலே தடவப் போகும் கார்லிக் பேஸ்ட். இப்போது தோசை செய்ய போகலாம்.

poondu-dosai1

கடாயை அடுப்பில் வைத்து தோசைக்கல்லை மிதமான சூடு செய்து தோசை ஊற்றிக் கொள்ளவேண்டும். மெல்லிசாக தோசை கல்லில் தோசையை வார்த்துவிடுங்கள். அடுத்தபடியாக தோசைக்கு மேலே ஒரு மூடியைப் போட்டு ஒரு நிமிடம் தோசை வேக வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். தோசையின் மேல் பகுதியில் இருக்கும் மாவு வெந்து விடவேண்டும். (தோசை மேல் பக்கத்தில் இருக்கும் மாவின் மேலே, கார்லிக் பேஸ்ட் அப்ளை செய்தால் கொழகொழவென மாறிவிடும் அல்லவா அதற்காகத்தான், தோசையை ஆப்பம் போல ஒரு மூடி போட்டு ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்).

- Advertisement -

ஒரு நிமிடம் கழித்து, தயார் செய்து வைத்திருக்கும் பூண்டு பேஸ்டை தோசையின் மேலே தடவி விட்டு, மேலே தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் போல மிதமான தீயில் தோசையை சிவக்க வைத்து திருப்பி போடாமல் அப்படியே எடுத்து பரிமாறினால் சூப்பரான பூண்டு தோசை தயார்.

poondu-dosai2

இதே பூண்டு தோசையை இன்னொரு முறையிலும் செய்யலாம். தோசையை வார்த்து மேலே உள்ள மாவு பகுதி வெந்தவுடன், பூண்டு பேஸ்டை தோசையின் மேலே தடவி 30 செகண்ட்ஸ் வரை விட்டுவிட்டு, அதன் பின்பு இந்த தோசைக்கு மேலே ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பரப்பி விட்டு அதன் மேலே லேசாக உப்புத் தூளைத் தூவி, தோசையை திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்தால், பூண்டு தோசையோடு சேர்த்த முட்டை தோசை தயாராக கிடைக்கும். உங்கள் விருப்பம் போல நீங்கள் செய்து கொள்ளுங்கள். சுலபமான முறையில் சுடக்கூடிய வெரைட்டி தோசை ரெசிபியில் இதுவும் ஒன்று. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -