பூண்டு தக்காளி கார சட்னியை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். 10 இட்லி சாப்பிட்டாலும் பத்தாது.

madurai-kara-chutney
- Advertisement -

விதவிதமாக என்னதான் சட்னி செய்தாலும் பூண்டு சேர்த்து காரசாரமாக சட்னி செய்தால் தனி ருசி தான். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டை வாரம் ஒரு முறை இப்படி சட்னியாக அரைத்து சாப்பிட்டால் தவறு கிடையாது. காரசாரமாக இந்த சட்னியை இட்லி தோசை பணியாரம் இவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். நல்ல ருசி இருக்கும். குறிப்பாக சுட சுட இட்லிக்கு இந்த சட்னியை அடிச்சுக்க வேற எதுவுமே இருக்க முடியாது. வேற லெவல் டேஸ்ட். அரைக்கும் போதே அப்படியே நாக்கில் எச்சில் ஊறும் வாங்க ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 100 கிராம் அளவு பூண்டு தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். வரமிளகாய் 10 லிருந்து 12 உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு வர மிளகாய்களை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதே எண்ணெயில் மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி பழம் – 3 போட்டு வதக்க வேண்டும். தக்காளி பழத்தை வெட்டக்கூடாது. முழுசாக போட்டு வதக்கிக்கோங்க. மேலே இருக்கும் தோல் நிறம் மாறி சுருங்கி வரவேண்டும். சரியாக சொல்லப்போனால் தக்காளி முக்கால் பாகம் வெந்திருக்க வேண்டும். வதக்கிய தக்காளி பழங்களை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அதே கடாயில் இப்போது உறித்து வைத்திருக்கும் பூண்டு பற்களை போட்டு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து கைவிடாமல் வதக்க வேண்டும். பூண்டின் மேல் பக்கம் மட்டும் லேசான பிரவுன் நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். வருத்த மிளகாய், வதக்கிய தக்காளிப் பழம், பூண்டு இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க. ஆறிய பின்பு. தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் திக்காக இந்த சட்னியை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

லேசாக மிக்ஸி ஜாரை மட்டும் அலசி தண்ணீரை சட்னியில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவாப்பிலை, பெருங்காயம் போட்டு மணக்க மணக்க தாளித்து அதை சுட சுட இந்த சட்னியில் கொட்டி நன்றாக கலந்து விட வேண்டும். எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும். நல்லெண்ணெயில் செய்யும் போது தான் இந்த சட்னியின் ருசி சூப்பராக இருக்கும்.

இந்த சட்னி வேற லெவல் டேஸ்ல இருக்குங்க. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இன்னைக்கு ராத்திரியே ட்ரை பண்ணி பாருங்க. இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். ரொம்பவும் காரணமாக இருக்கும் பட்சத்தில் நல்லெண்ணையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -