தாறுமாறு சுவை தரும் தக்காளி துவையல். இது வேற லெவல் டேஸ்ட் போங்க. தக்காளி வச்சு இப்படி கூட ஒரு துவையல் செய்ய முடியுமா?

thuvaiyal
- Advertisement -

பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு தக்காளி துவையல் ரெசிபி தான் இது. இட்லி தோசை பணியாரத்திற்கு தொட்டு சாப்பிட அசத்தலான சுவையில் இருக்கும். நாம் சாதாரணமாக செய்யக்கூடிய தக்காளி சட்னியை விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தே இந்த சுவையான சூப்பரான தக்காளி துவையல் எப்படி செய்வது. பெரும்பாலும் தக்காளியில் சட்னி தான் செய்வாங்க. இந்த துவையல் ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆர்வமா இருக்கா. வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். வர மல்லி – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 4 லிருந்து 5 உங்கள் காரத்திற்கு ஏற்ப, இந்த நான்கு பொருட்களையும் வாசம் வரும் வரை கருகாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய தக்காளி பழங்கள் – 5, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1/2 இன்ச் தோல் சீவி நறுக்கியது, பூண்டு பல் – தோலுரித்தது 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்குங்கள் தக்காளிப் பழம் பாதி வதங்கி வந்தவுடன், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, வெல்லம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தக்காளியை குழைய குழைய வதக்கி இதை நன்றாக ஆற வைத்து அப்படியே மிக்ஸி ஜாரில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவோடு போட்டுக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம். இதை நன்றாக துவையல் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு திப்பி திப்பியாக இருக்கட்டும். அதாவது 90% இந்த துவையல் அரைபட்டால் போதும். தாளிப்பு கூட தேவை இருக்காது. அவ்வளவு தான். (தேவைப்படுபவர்கள் தாளிப்பு போட்டாலும் தவறு கிடையாது) சுடச்சுட இட்லிக்கு சாப்பிட்டு பாருங்க. இனிப்பு புளிப்பு காரம் சேர்ந்த சுவையில் அசத்தலான ஒரு தக்காளி துவையல் ரெடி.

- Advertisement -

ஒரு டப்பாவில் இட்லியை வைத்து, அதன் மேலே இந்த தக்காளி துவையலை தடவி, மூடி போட்டு ட்ராவலுக்கு எடுத்துட்டு போங்க. காலையில் இப்படி தக்காளி துவையலில் ஊற வச்ச இட்லியை மதியம் சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதத்தில் குழந்தைகள் சிக்கன் கேட்டு அடம்பிடிக்கிறார்களா? கவலைய விடுங்க, இதோ சிக்கன் சுவையில் சூப்பரான காலிஃப்ளவர் பெப்பர் வறுவல்.

பின்குறிப்பு: இதில் காரத்திற்கு வரமிளகாய், பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து இருக்கின்றோம். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அதை அட்ஜஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தால் தான் இந்த தக்காளி துவையல் ரெசிபி சுவை தரும். கொத்தமல்லி தழை வாசத்திற்காக தான் வைக்க வேண்டும். பச்சை நிறம் தக்காளி சட்னியில் தெரியக்கூடாது. இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை கட்டாயம் எல்லோர் வீட்டிலும் ட்ரை பண்ணி பாக்கணும்.

- Advertisement -