இனி வாஷிங் மெஷினை துணி துவைக்க மட்டும் இல்லங்க, சமையல் வேலைக்கு கூட பயன்படுத்தலாம், அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

- Advertisement -

சமையலைப் பொருத்த வரையில் வீட்டில் இருக்கும் பெண்களாகட்டும், வேலைக்கு செல்லும் பெண்களாகட்டும் காலை வேளையில் சமைக்கும் போது அனைவருமே பரபரப்பாக தான் வேலை செய்து ஆக வேண்டும். இந்த அவசர வேளையில் வெங்காயம், பூண்டு இவை எல்லாம் உரித்து கொண்டு இருக்க முடியாது. அதையெல்லாம் முன்னமே தயார் செய்து வைத்திருந்தால் தான் அந்த நேரத்தில் வேலை சீக்கிரமாக முடியும். சமைக்கும் வேலையே சீக்கிரமாக முடித்தாலும் கூட இந்த பூண்டு உரிக்கும் வேலை என்பது கொஞ்சம் கடுப்பான வேலை தான். அது அத்தனை சுலபமாகவும் முடிந்து விடாது. எவ்வளவு பூண்டு இருந்தாலும் அதை பத்து நிமிடத்தில் உரிப்பது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வாஷிங் மெஷின் இருந்தால் போதும் எத்தனை கிலோ பூண்டையும் 10 நிமிடத்தில் உரித்து எடுத்து விடலாம். இதை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா வாஷிங் மெஷினில் பூண்டு உரிப்பதா? அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

பூண்டு தோலை சுலபமாக உரிக்க:
இதற்கு முதலில் பூண்டை எல்லாம் தனித்தனி பல்லாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை எடுத்து தரையில் வைத்து லேசாக நம் கையால் தட்டினால் போதும் உதிர்ந்து தனித்தனி பல்லாக வந்து விடும். அதன் பிறகு பூண்டில் இருக்கும் காம்புகளை பகுதி மட்டும் தனியாக எடுத்து விடுங்கள்.

அதன் பிறகு உரித்த பூண்டுகளை எல்லாம் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி தண்ணீர் வடிய விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பூண்டுகளை ஒரு துணிப்பையில் போட்டு நல்ல இறுக்கமாக ரப்பர் பேண்ட் வைத்து கட்டி விடுங்கள். அதை அப்படியே வாஷிங் மெஷினில் போட்ட பிறகு, டிரையர் ஆப்ஷன் எல்லா மெஷினிலும் இருக்கும். அந்த ஆப்ஷனில் மிஷினை ஆன் செய்து விட்டு துணிப்பையில் இருக்கும் பூண்டை வாஷிங்மெஷினில் போட்டு விடுங்கள். இது பிரென்ட் லோட், டவுன்லோட் எந்த மெஷின் ஆக இருந்தாலும் அதில் போடலாம். அதன் பிறகு மெஷினை ஆன் செய்து விட்டு பத்து நிமிடம் கழித்து மிஷன் நின்றவுடன் துணிப் பை எடுத்து அதில் இருக்கும் பூண்டை கீழே கொட்டி பாருங்கள். பூண்டு தனியாகவும், தோல் தனியாகவும் வந்து இருக்கும். இதிலிருந்து நீங்கள் பூண்டுகளை தனியாக எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். பூண்டை உரிக்க இதைவிட எளிமையான ஒரு வழி இருக்க வாய்ப்பே இல்லை.

- Advertisement -

இதே பூண்டை கொஞ்சமாக அவசரத்திற்கு உரிக்க வேண்டும் என்றால், இதே போல் ஒரு பையிலோ அல்லது கைக்குட்டையிலோ பூண்டை சேர்த்து அதை நாம் காய் சீவும் சீவலின் வாழக்காய் சீவுவது போல், இந்த பூண்டு கட்டிய மூட்டையை லேசாக தேய்த்து விடுங்கள். அப்போதும் பூண்டில் இருக்கும் தோல் எளிதாக வந்து விடும். இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக தான் பூண்டு உரிக்க முடியும். ஆனால் இந்த வாஷிங் மெஷினில் நீங்கள் எத்தனை கிலோ பூண்டாக இருந்தாலும் அதை ஒரே முறையில் போட்டு எடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே::இனி உங்க பட்டுப் புடவையில் எந்த கறை படிந்தாலும் கவலையே பட வேண்டாம். இந்த ஒரு பொருள் இருந்தா போதும், பட்டுப் புடவையில் இருக்க கறை எல்லாத்தையும் பட்டுனு காணாம செஞ்சிடும்.

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூண்டை எப்படி சுலபமாக உரிப்பது என்பதை தெரிந்து கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு இனி பூண்டு தோல் உரிக்கும் வேலை எல்லாம் பெரிய வேலையாகவே தெரியாது, முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -