பிறவிப் பிணி நீக்கும் பூச நட்சத்திரம்

poosam valipadu
- Advertisement -

இந்த உலகத்தை காத்து ரட்சிப்பதற்கு மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியரும் இருக்கின்றன. அவர்களுக்கு துணை புரிவதற்காக நவகிரகங்களும் 27 நட்சத்திரங்களும் திகழ்கின்றன. இதோடு மட்டுமல்லாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். இதில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் சிறப்புகள் நிறைந்திருக்கின்றன. அந்த சிறப்புகளை உணர்ந்து நாம் செயல்பட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் பூச நட்சத்திர நாளன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பூச நட்சத்திர நாளன்று எப்படி சிவபெருமானை வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களை செய்யக்கூடியவர்கள் தான் மும்மூர்த்திகள். இவர்களில் சிவபெருமான் நம்முடைய பிறவிப் பிணியை நீக்கக் கூடிய வல்லமை படைத்தவராக திகழ்கிறார். நம்முடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாம் பெருமாளை எப்படி வழிபடுகிறோமோ? அதே போல் மறுபிறவி வேண்டாம் இந்த பிறவியே போதும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

இதனாலேயே சிலர் பெருமாளை வணங்கினாலும் 60 வயதுக்கு மேல் சிவசிவா என்று சென்றால்தான் நற்கதி அடைய முடியும் என்று கூறியிருக்கிறார்கள். காரணம் 60 வயதிற்குள் தங்களுடைய கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்து விடுவார்கள். அடுத்ததாக அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை வழிபடுவார்கள். இது இன்றளவும் பலரும் செய்யக்கூடிய ஒரு செயலாக தான் இருக்கிறது. 60 வயதில் ரிட்டயர்மென்ட் ஆகிவிட்டு கோவிலே கதி என்று இருப்பவர்கள் பலரை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பிறவிப் பிணியை நீக்கக்கூடிய நட்சத்திரமாக திகழ்வதுதான் பூச நட்சத்திரம். நாளை தைப்பூசம் எப்படி முருகப்பெருமானுக்கு இந்த தைப்பூசம் விசேஷமான நாளாக திகழ்கிறதோ? அதேபோல் சிவபெருமானுக்கும் இது சிறந்த நாளாக தான் திகழ்கிறது. பூச நட்சத்திர நாளன்று நதியில் நீராட வேண்டும். நீராடி விட்டு அந்த நதிக்கரையில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் சிவபெருமானை முழு மனதுடன் சரணாகதி அடைய வேண்டும். பிறகு கோவிலை 19 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஐந்து பூச நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு மேற்கொண்டு வருபவர்களூடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். மறுபிறவி என்பது இருக்காது. நற்கதி பேரு கிடைக்கும். அதனால்தான் நம்முடைய சித்தர் பெருமக்கள் பலரும் பூச நட்சத்திரத்தை தேர்வு செய்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக நாம் வள்ளலாரை கூட கூறலாம். அவர் தைப்பூச நாளை தேர்ந்தெடுத்து தான் ஜோதியில் ஐக்கியமானார். அதனால் தான் தைப்பூச நாள் அன்று வள்ளலார் கோவிலில் தீப ஜோதி தரிசனம் என்பது மிகவும் பிரசித்தியாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: தை பௌர்ணமி வழிபாடு

எந்தளவுக்கு நாம் பாவங்களை செய்து கர்ம வினைகளை சேர்த்து வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்வில் நாம் பல கஷ்டங்களை அனுபவித்து தான் தீர வேண்டும். அப்படி அனுபவித்து விட்டு மேற்கொண்டு எந்தவித பாவங்களையும் செய்யாமல் சிவபெருமானின் பாதங்களில் சரணாகதி அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் இந்த பூச நட்சத்திர நாளை விட்டு விடாமல் நதிக்கரையில் நீராடி சிவபெருமானை வழிபடலாம்.

- Advertisement -