தை பௌர்ணமி வழிபாடு

thai pournami
- Advertisement -

பௌர்ணமி என்பதே சிறப்பு. அதிலும் தை பௌர்ணமி என்பது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பெண் தெய்வங்களை வழிபடும் முறையை பின்பற்றி வந்தார்கள். அது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாட்டையும், வீட்டு தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தை பௌர்ணமி அன்று வீட்டு தெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

குலதெய்வம் என்பது குலத்தைக் காக்கக்கூடிய தெய்வம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் வீட்டு தெய்வம் என்று இருக்கிறது. இந்த தெய்வம் நம் வீட்டை காக்கக்கூடிய தெய்வமாக திகழ்கிறது. எப்படி குலதெய்வ வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறதோ, அதே போல் வீட்டு தெய்வ வழிபாடும் முக்கியமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. அந்த நோக்கத்தில் தான் நம்முடைய முன்னோர்கள் தை பௌர்ணமி அன்று வீட்டு தெய்வத்தை வீட்டில் வழிபாடு செய்தார்கள்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் இந்த வழிபாடு காலப்போக்கில் மறைந்து போய்விட்டது. அதை மறுபடியும் நினைவு கூர்ந்து வீட்டு தெய்வத்தை வழிபடும் முறையை பார்ப்போம். இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் போதும். இயன்றவர்கள் மாதா மாதம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதற்கு நமக்கு கண்டிப்பான முறையில் மரக்கால் தேவைப்படும்.

அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, நெல்லை அளப்பதற்காக பயன்படுத்திய மரக்காவை நாம் வாங்கி வர வேண்டும். அது நிறைய நெல்லை நிரப்ப வேண்டும். பிறகு அதில் ஒரு தென்னங்குருத்தை ஊண்டி வைக்க வேண்டும். அந்த தென்னங்குருத்துக்கு முன்பாக காமாட்சி விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த மரக்காவிற்கு முன்பாக ஒரு பலகையை போட்டு அதற்கு மேல் சுங்குடி சேலை, கருகமணி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பூ, பானகம் தெள்ளு மாவு மற்றும் வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்கள் இவை அனைத்தையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு பானகத்தை வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரசாதமாக வழங்கி விட்டு, பிறகு தெள்ளுமாவை பிரசாதமாக தர வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும். தென்னங்குருத்தில் இருந்து பூ பூத்து காய் காய்ப்பது போல் நம் குலமும் தழைத்தோங்கும். வீட்டு தெய்வத்தின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தைப்பூச சிறப்புகளும் வழிபாடுகளும்

நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வொரு வழிபாட்டு முறைகளிலும் நமக்கு அறிவியல் ரீதியாக பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த வழிபாட்டையும் நாம் செய்து நம்முடைய வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்வோம்.

- Advertisement -