உருளைக்கிழங்கை இப்படி செஞ்சீங்கன்னா செய்ய செய்ய தட்டு காலி ஆயிடும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக் கூடிய கிரிஸ்பியான உருளைக்கிழங்கு ரெசிபி.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கை கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் 65யாக எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

உருளைக்கிழங்கு 65 செய்வதற்கு நல்ல பெரிய சைஸ் இருக்கும் நான்கு உருளைக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து மேலே தோல் சீவி சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பவுலில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 4 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் உப்பு, இரண்டு டீஸ்பூன் சமையல் எண்ணெய், 1/2 எலுமிச்சை பழ சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முதலில் கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இதில் லேசாக தண்ணீர் தெளித்து கலந்து ஐந்து நிமிடம் மட்டும் அப்படியே வைத்து விடுங்கள். அதிக நேரம் இதை ஊற விடக் கூடாது. அதே நேரத்தில் தண்ணீரும் அதிகமாக சேர்த்து விடக் கூடாது. 65 மொறு மொறுவென்று வராது.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மசாலா கலந்து வைத்த உருளைக்கிழங்கில் இருந்து கொஞ்சமாக கையில் எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போடுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டு அதன் பிறகு உருளைக்கிழங்கு கலந்து விடுங்கள். கான்பிளவர் மாவு சேர்த்திருப்பதால் இது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். எனவே அடிக்கடி கரண்டி வைத்து கலந்து கொண்டே இருங்கள். நன்றாக சிவந்து வரும் வரை இப்படி செய்ய வேண்டும்.

உருளைக்கிழங்கு எண்ணெயில் நன்றாக சிவந்து வந்த பிறகு அதை எடுத்து வடிஜெல்லியில் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு நான்கு பச்சை மிளகாயை கீறி எண்ணெயில் போட்டு பொரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் லேசாக மட்டும் கீறி போட வேண்டும். இரண்டாக அரிந்து விட வேண்டாம். அதே போல் ஒரு கொத்து கருவேப்பிலையும், பத்து பல் பூண்டை யும் நசுக்கி அதையும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து இந்த 65 சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முருங்கைக்காய் கிரேவி செய்முறை: ( Drumstick Curry Recipe in Tamil)

இவை அனைத்தையும் ஒன்றாக குலுக்கி அப்படியே குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும். இதையே சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். வெரைட்டி ரைசுக்கும் இது ஒரு நல்ல காம்பினேஷன்.

- Advertisement -