ஒரு துளி கருப்பை கூட உங்களுடைய முகத்தில் பார்க்கவே முடியாது. 7 நாட்களில் முகம், கழுத்து, கை, கால் எல்லாம் ஒரே வெள்ளை நிறத்தில் சீராக மாற 1 உருளைக்கிழங்கே போதும்.

face2
- Advertisement -

நிறைய பேருக்கு முகம் கை கால் முட்டி எல்லாம் சீராக ஒரே நிறத்தில் இருக்காது. முகம் மட்டும் பார்ப்பதற்கு கொஞ்சம் வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்து ரொம்பவும் கருப்பாக இருக்கும். கை அதைவிட கருப்பாக இருக்கும். கால்கள் அதற்கு மேல் கருப்பாக இருக்கும். உடல் முழுவதும் சீரான வெள்ளை நிறத்தைப் பெற, முகத்தில் இருக்கும் கருமை நீங்க அக்குள் பகுதியில் இருக்கும் கருமை நீங்க, முட்டி பகுதியில் இருக்கும் கருமை நீங்க, எல்லாவற்றிற்கும் சேர்ந்த மாதிரி ஒரு பேக் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய செலவு செய்ய வேண்டாம். காய்கறி கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கே போதும்.

அளவு என்பது நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். முகத்திற்கு, கழுத்திற்கு மட்டும் பேக் போட வேண்டுமென்றால் 2 உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் போதும். உடல் முழுதும் இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டுமென்றால் கொஞ்சம் அதிக அளவு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். 2 உருளைக்கிழங்குகளை எடுத்து தோல் சீவி குக்கரில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேக வைத்த இந்த உருளைக்கிழங்கு சூடு நன்றாக ஆற வேண்டும். அதன் பின்பு உருளைக்கிழங்கை லேசாக மசித்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதோடு பால் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். பச்சை பால் அல்லது காய்ச்சிய பால் எது வேண்டுமென்றாலும் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். பால் ஸ்கின்னுக்கு செட்டாகாது என்றால் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.

விழுது போல கிரீமி ஆக நமக்கு ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும். இதோடு 1 ஸ்பூன் காபி பவுடர் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். 2 உருளைக்கிழங்கு, 1 ஸ்பூன் காபி பவுடர் போதும். 4 உருளைக்கிழங்கு எடுத்தால் 2 ஸ்பூன் காபிதூள் போட்டுக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலக்கி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நமக்கு பேக் கிடைத்துவிட்டது. முகத்திலும் கழுத்திலும் மட்டும் தேவை என்றால் போட்டுக் கொள்ளுங்கள். அல்லது முட்டிகளில் அதிகமாக கருப்பு இருந்தால் அங்கும் போட்டுக் கொள்ளுங்கள். உடல் முழுவதும் கூட இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம். உங்களுடைய இஷ்டம்.

20 நிமிடங்கள் அப்படியே உங்களுடைய சருமத்தில் இந்த பேக் இருக்க வேண்டும். அதன் பின்பு பேக்கிற்கு மேலே தண்ணீரை தெளித்து நன்றாக நினைத்துக் கொண்டு, உங்களுடைய கையையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு இரண்டு நிமிடம் போல வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். சோப்பு போட்டு கழுவ கூடாது.

இன்ஸ்டன்டா உங்களுடைய சருமத்தின் நிறம் கூடி இருப்பதை நீங்களே பார்க்கலாம். பேக் மிஞ்சி விட்டால் கவலையில்லை. பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாது. மிக மிக சுலபமான பேக். இந்த ரிமெடி உங்களுக்கு பிடிச்சிருக்கா? மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டாலே போதும். சும்மா சுண்டினால் ரத்தம் வர கலருக்கு நீங்க மாறிடுவீங்க.

- Advertisement -