டீ போட்ற கேப்ல 5 நிமிஷத்துல உருளைக்கிழங்கு, ரவை ஃபிங்கர் சிப்ஸ்! இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களே! சூப்பர் ஸ்நாக்ஸ் இது.

potato5

உருளைக்கிழங்கை வைத்து எந்த ரெசிபியை செய்தாலும், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் இருக்கும் மிகக் குறைந்த பொருட்களை வைத்தே, சுலபமான முறையில், சுவையான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொண்டால் மட்டும் போதும். இந்த ரெசிபியை டக்குனு ரெடி பண்ணிடலாம்.

potato

முதலில் 4 உருளைக்கிழங்குகளை சரியான பக்குவத்தில் வேக வைத்து தோலுரித்து, தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் போட்டு 3 விசில் வைத்து கூட உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கையில் மசித்துக் கொள்ள வேண்டும். கையில் மசித்துக் கொள்ள முடியவில்லை என்றால், ஒரு காய் துருவியில் துருவி அதன் பின்பு நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.

வேகவைத்த உருளைக்கிழங்கு மசியலோடு, ரவை – 4 டேபிள்ஸ்பூன், மைதா மாவு அல்லது கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், மிளகுத்தூள் -1/2 ஸ்பூன் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

potato3

உருளைக்கிழங்கில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது. தண்ணீர் தேவை கிடையாது. நீங்கள் இந்த மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்த பின்பு, மாவு கெட்டிப் பதத்தில் தான் இருக்கவேண்டும். கொஞ்சம் தண்ணீராக கொழகொழவென்று இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் அரிசி மாவை கூடுதலாக போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையானது பொலபொலவென இருந்தால், சிப்ஸை பொரித்து எடுக்கும் போது எண்ணெய் நிறைய குடித்து விடும்.

- Advertisement -

இந்த மாவை, அதன் பின்பு உங்களது கைகளால் சிறிய உருண்டையாக பிடித்து அதன் பின்பு விரல்கள் போல் நீளவாக்கில் உருட்டிக் கொள்ள வேண்டும். இதோ கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல். எல்லா மாவையும் ஃபிங்கர் வடிவத்தில் பிடித்து வைத்து கொண்டு, அடுப்பில் கடாயில் எண்ணையை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள்.

potato2

எண்ணை நன்றாக காய வில்லை என்றாலும் இந்த ஃபிங்கர் சிப்ஸ் எண்ணை குடிக்கும். எண்ணை நன்றாக காய்ந்து விட்டாலும், சிப்ஸ் போட்டோவுடன் கருக்கத் தொடங்கி விடும். மிதமான தீயில் எண்ணையை காய வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

potato4

அதன்பின்பு ஃபிங்கர் சிப்ஸ் ஒவ்வொன்றாக எடுத்து கடாயில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பக்குவமாக பொன்னிறமாக சிவக்க வைத்து எடுங்கள். இதை உங்களுடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்து பாருங்கள். எல்லோரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு டொமேடோ சாஸ் தொட்டு யம்மி யம்மியாக கொடுங்கள் மொத்தத்தையும் சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே
எதற்கு பயன்படும் என்றே தெரியாமல் தூக்கி எறியப்படும் ‘சிலிகான் ஜெல்’ வீட்டில் இத்தனை நன்மைகளை கொடுக்குமா? இவ்ளோ நாள் இது கூட தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.