எதற்கு பயன்படும் என்றே தெரியாமல் தூக்கி எறியப்படும் ‘சிலிகான் ஜெல்’ வீட்டில் இத்தனை நன்மைகளை கொடுக்குமா? இவ்ளோ நாள் இது கூட தெரியாம போச்சே!

silica-jel-uses
- Advertisement -

அலோகமாக இருக்கும் சிலிகான் புவியில் ஆக்சிஜன் அடுத்து அதிகம் கிடைக்கக் கூடியது. வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் சிலிகான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகம் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் சிலிகான் ஜெல் அந்த ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது. இதனால் தான் பெரும்பாலும் நாம் வாங்கும் காலணிகள், பேக்குகள், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

silica-jel

இது போல் இருக்கும் சில வீட்டு உபயோக பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் பிரித்துப் பார்க்கும் பொழுது உள்ளே இருக்கும் இந்த சிலிகான் ஜெல் பேக்குகள் என்னவென்றே தெரியாமல் பலரும் தூக்கி குப்பையில் எறிந்து விடுகிறார்கள். அந்த பாக்கெட்டுக்கு மேலே தூக்கி எறிந்து விடவும் என்று தான் ஆங்கிலத்தில் எழுதி இருக்கும். நாமும் சரி ஏதோ விபரீதமான பொருள் போலிருக்கிறது என்று எண்ணி அதை தூக்கி எறிந்து விடுகிறோம்.

- Advertisement -

சிலிக்கான் ஜெல் வெளிப்புற பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளிடமிருந்து தள்ளியே வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த இரு விஷயங்களில் மட்டும் எச்சரிக்கையாக இருந்தால் போதும். அந்த பாக்கெட்டை தூக்கி எரிவதற்கு பதிலாக நம் வீட்டில் உபயோகமான பல விஷயங்களை செய்து கொள்ள முடியும். அப்படி நாம் இதனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

god-photo-frames

மழைக்காலங்களில் செல்லரிக்கும் சில பொருட்களில் இந்த சிலிகான் ஜெல் பாக்கெட்டை எடுத்து செல்லோ டேப் போட்டு ஒட்டி விட்டால் போதும். ஈரப்பதம் எதுவுமில்லாமல் உலர்வாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினால் சில பொருட்கள் செல் அரிப்புக்கு ஆளாகிறது. உதாரணத்திற்கு பூஜை அறையில் இருக்கும் சாமி படங்களுக்கு பின்னால் மழைக்காலத்தில் செல்லரித்துப் போயிருக்கும். இதனைத் தவிர்க்க சிலிக்கான் ஜெல் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சமையலறையில் மசாலாப் பொருட்களையும் மற்ற இதர பொருட்களையும் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் மழைக்காலங்களில் பொருட்கள் விரைவாக கெட்டுப் போவதையும், நமத்துப் போய் விடுவதையும் பார்க்கிறோம். இதனை தவிர்க்க அந்த டப்பாவில் வெளிப்புறமாக சிலிக்கான் ஜெல்லை ஒட்டி வைத்தால் போதும். காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அந்த ஜெல் தன்னுள்ளே உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் பொருட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.

masala-podi

துணிகளை உலர்த்தவும் சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்தலாம். ஈரப்பதத்துடன் இருக்கும் துணிமணிகளை சிலிகான் ஜெல்லுடன் போட்டு வைத்தால் போதும். சுலபமாக உலர்ந்து காய்ந்துவிடும். இது போல் செல்போன் திடீரென தண்ணீரில் பட்டுவிட்டால் பதற்றம் கொள்ள வேண்டாம். 2, 3 சிலிகான் ஜெல் பாக்கெட்டுகளை செல்போனுடன் போட்டு வைத்தால் போதும். அதிலிருக்கும் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் செல்போன் பாதுகாப்பாக இருக்கும். செல்போன் மட்டுமல்ல மற்ற எலக்ட்ரானிக் பொருட்களையும் இது போல் செய்து பயன்பெறலாம்.

- Advertisement -

silica-jel1

வீட்டின் ஜன்னல், கதவுகள் ஈரப்பதத்தால் செல்லரித்துப் போகாமலிருக்க குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் அதனை ஒட்டி வைக்கலாம். சிலிகான் ஜெல்லை பொறுத்தவரை பாக்கெட்டை மட்டும் பிரித்து விடக்கூடாது. அதனை அப்படியே பாக்கெட்டோடு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடங்களில் போட்டு வைக்கலாம். நீங்கள் அதிகம் பயன்படுத்தாத நகைகளும் விரைவாக காற்று பட்டு மங்கிப்போய் விடும், எனவே அந்த இடத்திலும் போட்டு வைக்கலாம்.

seruppu-slipper

செருப்பு மற்றும் ஷூ போன்றவைகளை அடுக்கி வைக்கும் ஸ்டாண்டுகளில் போட்டு வைத்தால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும். ஷூ விலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க இது ஒரு சிறந்த வழியாகும். வீட்டில் நாம் பயன்படுத்தும் டூல்ஸ் பாக்ஸில் போட்டு வைக்கலாம். டூல்ஸ் பாக்ஸில் இரும்பு பொருட்கள் அடிக்கடி துருப்பிடித்து விடுவதுண்டு. இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை போட்டு வைக்கலாம். அல்லது கரித் துண்டுகளையும் போட்டு வைக்கலாம். இவைகள் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் பத்திரமாக இருக்கும்.

silica-jel2

முக்கிய குறிப்பு: எந்த காரணத்தைக் கொண்டும் சிலிகான் ஜெல் பாக்கெட்டை பிரிக்கக் கூடாது. ஒரு முறை அந்த பாக்கெட் கிழியும் நிலைக்கு வந்து விட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும், என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
அடடே! இந்த பேப்பரை வைத்து இவ்ளோ செய்யலாமா? இது தெரியாமல் தூக்கி போட்டோமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -