உருளைக்கிழங்கு இருந்தா போதும் 10 நிமிடத்தில் சூப்பரான டிக்கி இப்படி செஞ்சு பாருங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

potato-tikki1_tamil
- Advertisement -

கொஞ்சம் உருளைக்கிழங்கு இருந்தால் போதும் சட்டுன்னு செய்து அசத்தக் கூடிய இந்த டிக்கி எல்லோருமே விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும். கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடக்கூடிய இந்த டிஷ்சஸ் வீட்டில் செய்தால் ரொம்ப ரொம்ப எளிதானது மற்றும் செலவே இல்லாதது ஆகும். அப்படிப்பட்ட ஒரு அருமையான உருளைக்கிழங்கு டிக்கி ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் புதினா இலைகள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – கால் ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

உருளைக்கிழங்கு டிக்கி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கால் கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு துருவலில் இட்டு துருவி வைத்துக் கொள்ள வேண்டும். துருவிய இந்த உருளைக்கிழங்குடன் தோல் நீக்கி மெல்லியதாக பொடிப்பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் பொதினா இலைகள் கொஞ்சம் போல தூவி விடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். காரத்திற்கு மிளகாய் தூள் மற்றும் பிளேவருக்கு கரம் மசாலாத்தூள் மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கலந்து விட்ட பின்பு கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கெட்டியாக மாவு பிசைந்ததும் கையில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டி கட்லெட் போல வட்ட வடிவமாக செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்த அதில் ஒரு பேன் ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருளைக்கிழங்கு வில்லைகளையும் போட்டு நன்கு பொன்னிறமாக இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான், ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு டிக்கி சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
சேமியா உப்புமாவை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

இதை வெவ்வேறு விதங்களில் செய்யலாம் ஆனால் இது ரொம்பவும் ஈசியாக செய்யக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த உருளைக்கிழங்கு டிக்கி நீங்களும் உங்க வீட்டில் செய்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிட்டு உங்களை நிச்சயம் பாராட்டுவாங்க. இதை ஈவினிங் டீயுடன் ஸ்நாக்ஸ் மாதிரியும் மற்றும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கூட வைத்து அனுப்பலாம். உருளைக்கிழங்கு டிக்கியுடன் சாஸ் வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

- Advertisement -