சேமியா உப்புமாவை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

semiya-kichadi_tamil
- Advertisement -

உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் உப்புமா செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். கிச்சடி என்று கூறப்படும் இந்த சேமியா காய்கறிகளை போட்டு செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ரொம்ப ரொம்ப ஈஸியான முறையில் சேமியா கிச்சடி எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு + அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, கேரட் – ஒன்று, மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, சேமியா – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

இந்த சேமியா உப்புமா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் தோலுரித்த வேர்க்கடலைகளை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே எண்ணெயில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, கொஞ்சம் கருவேப்பிலைகளை போட்டு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் ஒரு சிறிய கேரட் ஒன்றை ரொம்பவும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். கேரட் மட்டும் அல்லாமல் பீன்ஸ், ஊற வைத்த பச்சை பட்டாணி போன்ற மற்ற காய்கறி வகைகளையும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

பொடியாக நறுக்கி சேர்ப்பதால் காய்கறிகள் அனைத்தும் சீக்கிரம் வெந்து வரும். அனைத்தும் நன்கு வெந்து வந்த பின்பு கொஞ்சம் போல மஞ்சள் தூள், உப்பு போட்டு ஒரு முறை நன்கு வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
எப்பவும் நம்ம வீட்ல செய்யற தேங்காய் சாதத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா? இப்படி ஒரு ரெசிபியை யாரும் யோசித்து கூட இருக்க மாட்டீங்க. நாளைக்கு லஞ்ச் பாக்ஸுக்கு உங்க வீட்ல கட்டாயம் இது தான் இருக்கும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நீங்கள் சேமியாவை சேர்த்து கலந்து விடுங்கள். ஒருமுறை கலந்து விட்ட பின்பு மூடி போட்டு வேக விடுங்கள். இடையிடையே மூடியை எடுத்து கிண்டி விட்டுக் கொண்டு வாருங்கள். ஐந்தில் இருந்து ஏழு நிமிடத்திற்குள் நன்கு தண்ணீர் முழுவதையும் உரிந்து கொண்டு சேமியா வெந்து உதிரி உதிரியாக வந்து விடும்.

வெந்து வந்த பின்பு அரை மூடி எலுமிச்சை சாறு விட்டு, வேர்க்கடலைகளையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான், இந்த சேமியா உப்புமாவை கிச்சடி போல இதே மாதிரி நீங்களும் செய்து கொடுத்தால் கண்டிப்பாக சேமியாவை விரும்பாதவர்களும் விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

- Advertisement -