தேங்காய் சேர்க்காமலேயே தேங்காய் சட்னி சுவையில் பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது?

pottu-kadalai-chutney1
- Advertisement -

தேங்காய் சட்னி சுவையிலேயே இந்த பொட்டுக்கடலை சட்னி இருக்கும் ஆனால் கொஞ்சம் கூட இதில் நாம் தேங்காய் சேர்க்கப் போவது இல்லை. தேங்காய் இல்லாத சமயங்களில் இது போல சூப்பரான டேஸ்டில் பொட்டுக்கடலை சட்னி வச்சு பாருங்க இட்லி, தோசை மட்டும் அல்லாமல் உப்புமா, பணியாரம், பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி எப்படி பொட்டுக்கடலை சட்னி அரைக்கலாம்? என்பதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம்.

பொட்டுக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – ஐந்து, பெரிய வெங்காயம் – 3, பொட்டுக்கடலை – கால் கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் – மூன்று.

- Advertisement -

பொட்டு கடலை சட்னி செய்முறை விளக்கம்:
இந்த பொட்டுக்கடலை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உங்கள் காரத்திற்கு ஏற்ப மீடியம் சைஸ் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் நிறம் மாறும் அளவிற்கு சுருள வறுபட வேண்டும். அப்பொழுது தான் அதில் அதிக காரம் எடுக்காமல் இருக்கும். பிறகு மூன்று பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸ் அளவில் எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வர வதக்கி விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து கால் கப் அளவிற்கு பொட்டு கடலை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னியை ரொம்பவும் தண்ணீராக இல்லாமல், ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் இடைப்பட்ட பகுதியில் இருக்குமாறு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவை வறுபட்டதும் ஒரு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு மூன்று காய்ந்த மிளகாய்களை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பரான தேங்காயில்லாத பொட்டுக்கடலை சட்னி தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -