அருமையான சுவையில் வித்தியாசமான பொட்டுக்கடலை ஸ்வீட்

pottukadalai sweet
- Advertisement -

நியூ இயர் வரப்போகுது. அன்னைக்கு சமையல்ல கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ஸ்வீட் இருக்கத்தான் செய்யும். ஒரு சிலருக்கு காலையிலேயே ஸ்வீட் செய்து சாமிக்கு வைத்து கும்பிட வழக்கமும் இருக்கு. இப்படி நம்ம ஸ்வீட் செய்யும் போது ஏற்கனவே செஞ்ச ஸ்வீட்ட செய்யாம புது விதமா அதேசமயம் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு ஸ்வீட்ட செஞ்சு அசத்தலாமா? அந்த ஸ்வீட்ட எப்படி செய்யறதுன்னு தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இந்த ஸ்வீட்டுக்கு நமக்கு தேவைப்படும் பொருள் பொட்டுக்கடலை. இதை உடைத்த கடலை என்று கூட கூறுவார்கள். பொட்டுக்கடலையில் அதிக அளவு நார் சத்துக்களும், புரதச்சத்துக்களும் இருக்கிறது. செரிமான சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் எடையை குறைக்க பெரிதும் துணை புரிகிறது. இந்த பொட்டுக்கடலையை வைத்து எப்படி ஸ்வீட் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பொட்டுக்கடலை – ஒரு கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • ஏலக்காய் – 4
  • நெய் – 1/4 கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பொட்டுக்கடலையை சேர்க்க வேண்டும். அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொடியை சல்லடையை வைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சலித்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நெய்யை சேர்த்து நன்றாக பிணைய வேண்டும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவு வரவேண்டும். ஆனால் இதில் தண்ணீரோ, பாலோ எதுவும் சேர்க்கக்கூடாது. நெய் மட்டுமே சேர்த்து பினைய வேண்டும். இதில் ஏற்கனவே சர்க்கரை இருக்கிறது என்பதால் நாம் பிணைய பிணைய மாவு இலகுவாக மாறும் என்பதால் நன்றாக பிணைந்த பிறகு மாவு வறண்டிருந்தால் மட்டுமே நெய்யை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

நன்றாக பிணைந்த பிறகு கையில் சிறிது நெய்யை தடவி விட்டு நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இந்த மாவை பிணைந்து எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை ஸ்வீட் தயாராகி விட்டது. மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் அடுப்பையே உபயோகப்படுத்தாமல் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு. சுவையிலும் மிகவும் அசத்தலாக இருக்கும்.

இந்த இனிப்பை செய்வதற்காக எந்த பொருட்களையும் மெனக்கெட்டு கடைக்கு போய் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. இவை அனைத்துமே அனைவரின் இல்லங்களில் இருக்கக்கூடிய பொருட்கள் என்பதால் எளிதில் இந்த இனிப்பை நம்மால் செய்து விட முடியும்.

இதையும் படிக்கலாமே: நாவில் எச்சில் ஊறும் கேரட் மைசூர்பாக்கு

சத்து மிகுந்த பொட்டுக்கடலையை நாம் இப்படி செய்து தருவதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -