இந்த சட்னிக்கு இட்லியை தொட்டு சாப்பிட மாட்டீங்க. இட்லியை போட்டு பிரட்டி சட்னியில் முக்கிதான் சாப்பிடுவீங்க. அவ்வளவு ருசி.

paruppu-chutney
- Advertisement -

அந்த அளவிற்கு சுவையான சட்னியா. என்ன சட்னி இது. என்று கேட்டால் பொட்டுக்கடலையை வைத்து செய்யக்கூடிய சாதாரண சட்னி தான். ஆனால் கூடுதல் சுவையோடு செய்யப் போகின்றோம். சுடச்சுட இட்லிக்கு மேலே இந்த சட்னியை ஊற்றி இட்லியை சட்னியில் பிசைந்து சாப்பிட்டால் நாவிற்கு அத்தனை ருசி இருக்கும். மதிய நேரத்திற்கு இட்லியோடு இந்த சட்னியை கொடுத்து விட்டாலும், இந்த சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும். சூப்பரான பொட்டுக்கடலை சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக. எத்தனை விதமாக புதுப்புது வெரைட்டியில் சட்னி வந்தாலும் காரசாரமான இந்த வர மிளகாய் பொட்டு கடலை சட்னிக்கு வேற எந்த சைட் டிஷ் ஈடாகாதுங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும், எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், தோல் உரித்த பூண்டு பல் – 3, வர மிளகாய் 5 லிருந்து 6, மிக சிறிய துண்டு – புளி, இஞ்சி தோல் சீவி – 1/2 இன்ச், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் தோல் சுருங்கி வதங்கி வந்த பிறகு தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து எண்ணெயிலேயே வதக்கி விடுங்கள். அப்போதுதான் சட்னி மதியத்திற்கு எடுத்து வைத்தாலும் கெட்டுப்போகாது.

- Advertisement -

தேங்காயை 2 நிமிடம் போல வதக்கி விட்டு பொட்டுக்கடலை – 100 கிராம், சேர்த்து பொட்டுக்கடலையையும் 2 நிமிடம் அந்த எண்ணெயிலேயே வதக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு தான் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நைஸ் ஆக இந்த சட்னியை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னி ரொம்பவும் திக்காக இருக்க கூடாது. கொஞ்சம் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், போட்டு தாளித்து இதை சட்டியில் கொட்டி கலந்தால் கம கம வாசத்தோடு கொஞ்சம் வித்தியாசமான பொட்டுக்கடலை சட்னி தயார். கொஞ்சம் சின்ன வெங்காய வாசனை, இஞ்சி பூண்டு வாசனை, அத்தனையும் சேர்ந்து இந்த சட்னிக்கு தூக்கலான ஒரு சுவையை கொடுக்கும்.

இட்லி மட்டுமல்ல, சுட சுட கல் தோசை மேல் இந்த சட்னியை வார்த்து சாப்பிட்டாலும் அருமையாக தான் இருக்கும். இது தவிர குழிப்பணியாரத்திற்கும் இந்த சட்னியை பரிமாறலாம். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் அதிகமாக இருக்கணும். பாத்துக்கோங்க.

- Advertisement -