குலதெய்வ சாபத்தால் துன்பத்திற்கு ஆளானவர்கள் மூன்று பௌர்ணமி இதை செய்தால், குலதெய்வம் மனம் குளிர்ந்து கேட்ட வரத்தை அள்ளி கொடுக்கும்

kuladeivam
- Advertisement -

தங்களுக்கென்று ஒரு கஷ்டம் வருகின்ற போது மட்டுமே பெரும்பாலானோர் தெய்வத்திடம் வருகின்றனர். அதிலும் குறிப்பாக தங்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி, வேலை, திருமணம் போன்றவை அமையாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு தங்கள் குலதெய்வம் பற்றிய நினைவு வருகின்றது. குலதெய்வத்திற்கு இதற்கு முன் தாங்கள் வேண்டிய படி நேர்த்திக்கடன் முறையாக செலுத்தாத காரணத்தாலேயே, தற்போது தாங்கள் பல துன்பங்களை அனுபவிக்கின்றோம் எனவும், அவர்கள் கருதுவார்கள். அந்த வகையில் தங்கள் குலதெய்வத்திற்கு முறையான நேத்திக்கடன் செலுத்தாததால் ஏற்படும் பாதகமான நிலையை போக்கும் எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது நாம் இந்த பூமியில் வாழ காரணமாக இருப்பது நம் முன்னோர்கள் தான். நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அனைவருமே அவரவர்களின் குலங்களுக்குரிய குல தெய்வத்தை முறையாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் வேண்டுதல் நிறைவேறினால், தங்கள் குல தெய்வத்துக்கு இன்ன, இன்ன செய்கிறோம் என மனதார வேண்டிக் கொள்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன், தங்களின் குலதெய்வத்திற்கு முறையான நேர்த்திக்கடனை செலுத்தி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் தாங்கள் வேண்டியபடி, தங்களின் குல தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை உருவாகிறது. ஒரு சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போகும் நிலையும் ஏற்படுகின்றது.

- Advertisement -

முதலில் நாம் ஒரு விடயத்தை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். நம் குலதெய்வம் என்றாலும் சரி, நாம் வழிபடும் வேறு எந்த தெய்வம் என்றாலும் சரி “எனக்கு இந்த நேர்த்திக்கடனை செலுத்தினால் மட்டுமே நான் உன்னை காப்பேன், செலுத்தவில்லையென்றால் உன்னை தண்டிப்பேன்” என எந்த தெய்வமும் கூறாது. மாறாக, நேத்திக்கடன் செலுத்தவில்லை என்றாலும் அந்த பக்தரை அவரின் குலதெய்வமோ அல்லது இன்னபிற தெய்வங்களோ தண்டிக்காது.

எனினும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும், எதிர் செயல் இருக்கும் என்கிற உலக நீதியின் அடிப்படையில், நமக்கு நன்மை செய்ததாக நாம் நினைக்கின்ற தெய்வங்களுக்கு பதில் மரியாதையாக அந்த தெய்வங்களுக்கு நாம் செய்யவேண்டியதை செய்யாமல் போகும் பட்சத்தில் நமக்கோ அல்லது நமக்கு பின் வரும் சந்ததியினருக்கோ, அவர்களின் வாழ்வில் மிக சிறப்பான நன்மைகள் ஏதும் அமையாமல் போகின்றது. இப்படி நமக்கும், நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் குலதெய்வத்திற்கு நேத்திக்கடன் செலுத்தாததால் ஏற்படுகின்ற தெய்வ குற்றம் நீங்க செய்ய வேண்டிய இரண்டு பரிகாரங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

- Advertisement -

தங்களின் முன்னோர்கள், தங்களின் குலதெய்வத்திற்கு வேண்டியபடி நேத்திக்கடன் செலுத்தாமல் போயிருந்தால் அந்த குலதெய்வ குற்றம் நீங்கிட, செலவு செய்து பல பெரிய, பெரிய கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தொடர்ந்து 3 பௌர்ணமி தினங்கள் சென்று வணங்கி வந்தால், உங்கள் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டதாக குலதெய்வம் கணக்கில் கொள்ளும். தொடர்ச்சியாக 3 பவுர்ணமி தினங்களுக்கு, உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், விடுபட்ட பௌர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல், மீண்டும் தொடர்ச்சியாக 3 பௌர்ணமி தினங்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட முயற்சிக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு தலைமுறை இடைவெளி காரணமாக தங்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாத நிலையில் இருப்பார்கள். மேலும், அவர்களின் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு நேர்த்திக் கடனை முறையாக செலுத்த இயலாததால், தாங்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்திப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லை மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க விஜயதசமி வழிபாடு

தங்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாத பட்சத்தில் குலதெய்வத்திற்கு முன்னோர்கள் செலுத்தாத நேர்த்திக் கடனை செலுத்த விரும்புபவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள “அம்மன், முருகன், பெருமாள்” போன்ற தெய்வங்களில் ஏதேனும் ஒரு தெய்வத்தின் ஆலயத்திற்கு தொடர்ந்து 3 பௌர்ணமி தினங்கள் சென்று வழிபட்டு வருவதால், குலதெய்வத்திற்கு முன்னோர்கள் நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி, தற்போது வாழ்கின்ற அவர்களின் சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

- Advertisement -