வீட்டில் சுப காரியத்தடை உள்ளது. எந்த ஒரு நல்ல பேச்சுக்குமே இடமில்லை. திருமண வயதில் பிள்ளைகள் இருந்தும், அவர்களுக்கு நல்ல வரன் அமையவில்லை. ஜாதகமும் சரியாகத்தான் இருக்கின்றது. நிறைய ஜாதகங்கள் வருகிறது. ஜாதகமும் பொருந்துகிறது. ஆனால் கடைசி நேரத்தில் வந்த இடம் கைநழுவி செல்கின்றது.
வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை பூஜையை கூட சரியாக செய்ய முடியவில்லை. சந்தோஷம் என்பதே வீட்டில் சுத்தமாக இல்லை என்பவர்கள் குலதெய்வத்தை ஒரே ஒரு முறை இந்த நாளில் சென்று வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயம் உங்களுடைய குடும்பத்தில் சுபகாரியத் தடை விலகி நல்லது நடக்கும்.
குலதெய்வ வழிபாடு
உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி, பெண் தெய்வமாக இருந்தாலும் சரி, பௌர்ணமி நாளில் அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பௌர்ணமி அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று எந்த வேண்டுதலை வைத்தாலும் அது அப்படியே உடனே பளிக்கும்.
உங்கள் குல வழக்கப்படி, நீங்க உங்க வீட்டு குல தெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதை முறைப்படி வழிபாடு செய்து கொள்ளுங்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து படையல் போட்டு வழிபாடு செய்வார்கள். சில குடும்பங்களில் கெடா வெட்டி விருந்து வைத்து வழிபாடு செய்வார்கள். அது உங்களுடைய விருப்பம் தான். வழிபாட்டை மாற்றக்கூடாது.
வழி வழியாக உங்களுடைய பாட்டன் பூட்டன் எப்படி வழிபாட்டை செய்தார்களோ அதே முறை படி உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி விடவும். பௌர்ணமி அன்று குலதெய்வத்தை குடும்பத்தோடு அங்காளி பங்காளியுடன் சென்று வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்து விடும்.
உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருமண தடை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தடை விலக குலதெய்வ கோவிலில் என்ன பரிகாரம் செய்வது. இப்படி வேண்டுதல் வைக்கும்போது உங்களுடைய குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு அந்த அம்பாளுக்கு ஒரு புடவையையும் வாங்கி செலுத்த வேண்டும்.
ஆண் தெய்வமாக இருந்தால் வேட்டி, அங்க வஸ்திரம் வாங்கி செலுத்தி என்னுடைய பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணம் நடந்து முடிந்த பிறகு மாங்கல்யம் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு சாத்துவதாக பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் வீட்டில் இருக்கும் திருமண தடை விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: மனம் தளறும்போது செய்ய வேண்டிய சிவன் வழிபாடு
உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அந்த ஆண் தெய்வத்தின் மனைவிக்கு இந்த மாங்கல்யத்தை வாங்கி அணிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தங்கத்தால் தான் தாலி வாங்கி செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புதுமஞ்சள் கயிறில் மஞ்சள் கொம்பு கட்டி அந்த அம்பாளுக்கு செலுத்தினால் கூட உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் சொன்ன முறைப்படி குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். வீட்டில் சுப காரியத்தை விலகி சந்தோஷம் பிறக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.