வாழ்க்கையில் யாரிடமாவது நாம் உண்மையாக நட்பு வைத்துக் கொண்டால், அந்த நட்பு நமக்கு நிச்சயம் நல்லதை மட்டும் தான் செய்யும். அறியாமல் கூட உண்மையான நட்புக்கு, நம்மால் துரோகம் செய்ய முடியாது. நண்பர்களை ஏமாற்ற முடியாது. அது போல தான், இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் நட்புறவோடு நெருங்கினால், இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும். கேட்டதை மட்டுமே கொடுக்கும்.
பிரபஞ்சம் என்றென்றும் உங்களுக்கு துரோகத்தை செய்யாது, கெடுதலையும் செய்யாது. அந்த வகையில் நீங்கள் இந்த பிரபஞ்சத்திடம் நெருங்கி செல்வதற்கு, பிரபஞ்சத்திடம் நெருக்கமான நட்பு வைத்துக் கொள்வதற்கு ஒரு அதிசக்தி வாய்ந்த 10 நிமிடத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த 10 நிமிடத்தில் பிரபஞ்சம் என்ன கேட்டாலும் உங்களுக்கு கொடுக்கும். உங்களுக்கு எது வேண்டாம் என்று சொல்கிறீர்களோ, அதை இந்த பிரபஞ்சம் உங்களிடமிருந்து விலக்கி வைத்து விடும். அடடா எவ்வளவு அழகான விஷயம். அந்த 10 நிமிடம் எப்போது வரும். ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பிரபஞ்ச வசிய பரிகாரம்
ஒவ்வொரு ஊருக்கு ஏற்றவாறு சூரியன் உதயமானது கொஞ்சம் வித்தியாசப்படும். சரியாக 6:00 மணிக்கு தான் சூரியன் உதயமாகும் என்று சொல்லிவிட முடி முடியாது. சில ஊர்களில் காலை 5:50 மணிக்கு சூரிய உதயம் ஆகிவிடும். சில ஊர்களில் 5:45க்கு கூட சூரியன் உதயமாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஐந்து நிமிடம் ஏழு நிமிடங்கள் என்று வித்தியாசம் வரும். உங்கள் ஊரில் சூரிய உதயம் நேரம் என்ன என்பதை கூகுள் செய்தால் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
சூரிய உதயத்திற்கு முன்பு 5 நிமிடம், சூரியன் உதிக்கும் நேரத்திற்கு பின்பு 5 நிமிடம் மொத்தமாக 10 நிமிடங்கள் நீங்கள் பிரபஞ்சத்திடம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேட்க வேண்டும். இந்த பத்து நிமிடம் ஒரு செகண்ட் கூட உங்களுடைய மனது அலைபாயக் கூடாது. பிரபஞ்சத்தோடு நீங்கள் நெருங்க வேண்டும். அதாவது உங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன.
நீங்கள் எந்த விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், உங்களுடைய கனவு என்ன. அதை காலை சூரிய உதய நேரத்தில், மேலே குறிப்பிட்டு உள்ளபடி, 10 நிமிடத்தில் இந்த பிரபஞ்சத்திடம் கேட்டால் நீங்கள் கேட்ட விஷயம் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கும். வீடு நகை பணம் நல்ல கணவன், நல்ல மனைவி எது கேட்டாலும் கிடைத்துவிடும்.
உங்களுக்கு வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் வேண்டாம். இந்த எதிரி என் வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும். இந்த கடன் என்னை விட்டு தூர செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சூரிய அஸ்தமனமாக கூடிய நேரத்திற்கு 5 நிமிடம் முன்பு, அஸ்தமனத்திற்கு 5 நிமிடம் பின்பு இருக்கக்கூடிய அந்த பத்து நிமிடத்தில், இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்தால், உங்களுக்கு வேண்டாத விஷயங்கள் உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: பணம் தரும் குபேர முத்திரை வழிபாடு
இது ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரம். இதற்கு பூஜை உனது கரங்கள் செய்ய வேண்டும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆண்களும் சரி பெண்களும் சரி இந்த பத்து நிமிடத்தை தினமும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் வீழ்ச்சி அடையவே மாட்டீங்க. உங்க குறிக்கோள் நீங்கள் வைத்த குறி என்றுமே தவறாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சமர்ப்பணம்.