- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேவையற்ற விஷயங்கள் நம்மை விட்டு விலக விநாயகர் வழிபாடு

தேவையற்ற விஷயங்கள் நம்மை விட்டு விலக விநாயகர் வழிபாடு

- Advertisement -

யார் இந்த உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம் என்று நாரதர் செய்த கலக கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். முருகப்பெருமான் தன்னுடைய மயில் வாகனத்தின் மூலம், இந்த உலகத்தையே சுற்றி வந்தார். ஆனால் விநாயகப் பெருமானோ, தாய் தந்தை தான் உலகம் என்று சொல்லி தாய் தந்தையை சுற்றி வந்து, ஞானப் பழத்தை வாங்கிக் கொண்டார். இந்த கதை நாம் எல்லோருக்கும் தெரியும்.

தந்திர வேலைகளை சிறப்பாக செய்யும் இந்த விநாயகப் பெருமானுக்கு, குறும்பு கொஞ்சம் அதிகம் தான். இந்த விநாயக பெருமானை சுற்றி சுற்றி வந்து நாம் என்ன வேண்டுதல் வேண்டுமென்றாலும் அதை அப்படியே கேட்டு வாங்கிக் கொள்ளலாம். விநாயகருக்கு குழந்தை மனசு. விநாயகரை சுற்றி என்ன வரம் கேட்டாலும் அது உடனடியாக கிடைத்துவிடும்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் சனிபகவானால் தோஷம், ராகு கேதுவால் தோஷம், கெட்ட கிரகங்களால் வாழ்க்கை நெறிமுறை சரி இல்லை என்றாலும், விநாயகப் பெருமான் தலையில் ஒரு மூன்று அருகம்புல்லை வைத்துவிட்டு வேண்டிக் கொண்டாலே, அந்த கிரக தோஷங்கள் எல்லாம் விலகி வாழ்வில் நன்மை பிறக்கும். இது பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நமக்கான நல்லதை வாரி வாரி கொடுக்கக் கூடிய இந்த விநாயகர் நமக்கான கெடுதலை நம்மிடம் இருந்து விலக்கி வைப்பார். அது எப்படி தெரியுமா. உங்களுக்கு எது வேண்டாம்? அதை இப்போது முடிவு செய்யுங்கள்‌. வேண்டாம் என்பதை உடனடியாக உங்களிடம் இருந்து விலக்கி வைக்க இதோ ஒரு எளிமையான விநாயகர் வழிபாடு.

- Advertisement -

கோவிலுக்கு சென்றால் வலப்பக்கத்தில் இருந்து, இடது பக்கம் கோவிலை வலம் வருவோம். ஆங்கிலத்தில் சொல்லப்போனால் கிளாக் வைஸ் தான் கோவிலை வலம் வர வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் விநாயகரை கும்பிட்டு விட்டு, இடது பக்கத்திலிருந்து வலப்பக்கமாக, அப்ரதக்ஷனமாக, ஆன்டி கிளாக் வைஸ் விநாயகரை சுற்றி வந்தால் உங்களிடம் இருக்கும் வேண்டாத விஷயங்கள் உங்களை விட்டு விலகிவிடும்.

உங்களுக்கு எது வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ, அதை உங்கள் பக்கம் விநாயகர் நெருங்கவே விடமாட்டார். உதாரணத்திற்கு கடன் சுமை உங்கள் பக்கம் வரக்கூடாது, எதிரி தொல்லை உங்கள் பக்கம் வரக்கூடாது, கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் எதுவுமே உங்கள் பக்கம் வரக்கூடாது என்றால், அதை விநாயகரிடம் சொல்லிவிட்டு விநாயகரை ஆன்டி கிளாக் வைஸ் மூன்று முறை சுற்றி வாருங்கள் போதும். இதை சொன்னால் நம்ப முடியாது.

இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் கொப்பரை தீபம்

இது கொஞ்சம் வித்தியாசமான பரிகாரம். இதை நீங்கள் கோவிலில் செய்தால் எல்லோரும் உங்களை ஒரு மாதிரி பார்ப்பாங்க. நோய் நொடி விலக வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். கெடுதல் உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், இதை நீங்கள் பிள்ளையார் கோவிலில் செய்யலாம். அரச மரத்தடி பிள்ளையார் கோவிலிலும் இதை செய்யலாம். நிச்சயம் நல்ல பலன் கை மேல் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்