- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறதா? அமாவாசை பெளர்ணமியில் இதை செய்தால்...

தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறதா? அமாவாசை பெளர்ணமியில் இதை செய்தால் போதும். தீர்க்கவே முடியாத பிரச்சனைகளை எளிதாக தீர்க்க எளிய இரண்டு பரிகாரங்கள்.

- Advertisement -

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. அவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் போது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு பரிகாரம் என்று நாம் பல பரிகாரங்களை மேற் கொள்கிறோம். வீட்டிற்கு வெளியில் எவ்ளவோ பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்கு வந்ததும் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று பலரும் எண்ணுவதுண்டு. ஆனாலும் வீட்டிலும் சிலர்க்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இதற்க்கு காரணம் நாம் சில விடயங்களை முறையாக செய்யாமல் இருப்பது தான். அந்த வகையில் வீட்டிற்கு வெளியிலும், வீட்டிற்கு உள்ளும் உள்ள பிரச்சனைகளை ஒரு சேர சரி செய்ய செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து பார்ப்போம்.

சரி செய்ய வேண்டிய விடயங்கள்:
வீடு என்று இருந்தால் அதற்கு தலைவாசல் என்ற ஒன்று கண்டிப்பாக முறையில் இருக்கும். குடும்ப பிரச்சினைக்கும், தலைவாசலுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. பொதுவாக பல இல்லங்களில் துளசி மாடம் வைத்து வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது. அவ்வாறு துளசி மாடம் வைப்பது தலை வாசலுக்கு எதிரில் அமைக்க கூடாது. மேலும் தலை வாசலை அடைப்பது போல் தலைவாசலுக்கு எதிரே தூண்கள் அல்லது மரம் இருக்க கூடாது.

- Advertisement -

வீடுகள் பிரகாசமாக இருப்பதற்கு விளக்குகள் இன்றியமையாததாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம் வீட்டில் ஏதேனும் விளக்குகளில் பழுதுகள் ஏற்பட்டு அதை சரி செய்யாமல் விட கூடாது. சிலர் தலைவாசலுக்கு முன்பாக கொடிகளை கட்டி ஈரத்துணிகளை காயப்போடும் பழக்கம் பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு இருப்பது மிகவும் தவறான செயல்.

சிலர் தலைவாசலில் கொடி வகைகளை (மணி பிளாண்ட், வெற்றிலை) போன்றவற்றை படர விட்டு வளர்ப்பார்கள். அவ்வாறு தலைவாசலில் கொடிகளை படர விடக் கூடாது. கொடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் அதற்குரிய இடமாக கருதப்படுவது வீட்டின் பின்புறமே. மேற்கூறிய இந்த செயல்களால் வீடுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த தவறுகளை சரி செய்த பிறகு பின்வரும் பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

- Advertisement -

பரிகாரம் – 1:
முதல் பரிகாரமாக தொங்கு விளக்கு வழிபாடு கருதப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது தலைவாசலிலோ இரண்டு புறமும் தொங்கு விளக்குகளை வாங்கி வந்து தொங்கவிட்டு, அதில் விளக்கெண்ணையை ஊற்றி ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் ஏற்ற உகந்த தினமாக கருதப்படுவது அமாவாசை தினம். அமாவாசை தினத்தில் கண்டிப்பாக ஐந்து முக தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீர்ந்து விடும்.

பரிகாரம் – 2:
பௌர்ணமி அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் வெண்பொங்கல் அல்லது தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக தயார் செய்து வைத்துக் கொண்டு, நம் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஒரு விளக்கெண்ணெய் தீபத்தை அகலில் ஏற்றி வைத்து, அதன் முன் நெய்வேத்தியத்தை வைத்து, “ஓம் சந்திராய நமஹ” என்று 108 முறை சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த சுவாமியை ஒரு முறை போய் கும்பிட்டு வாங்க போதும். உங்க ஜாதக கட்டத்தில் இருக்கும் அனைத்து குழப்பத்திற்கும் ஒரு தெளிவு பிறக்கும். சகல விதமான சந்தோஷமும் ஐஸ்வரியமும் உங்கள் வீடு தேடி வரும்.

இவ்வாறு சொல்லி சந்திரனை வழிபடுவதன் மூலம் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து விடும். பொதுவாக பரிகாரம் செய்வது என்பது குறைந்தபட்சம் மூன்று முறைக்கு மேலாவது செய்ய வேண்டும். மூன்று முறைக்கு மேல் செய்தால் தான் அதற்குரிய பலன் ஏற்படும் என்பதால், மூன்றுக்கு மேற்பட்டு நம்மால் முடிந்த அளவு இந்த பரிகாரத்தை மேற்கொண்டு, நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து, மன நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழலாம்.

சற்று முன்