தலையெழுத்து மாற பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

sivan1
- Advertisement -

மனிதர்களாக இந்த பூலோகத்தில் அவதாரம் எடுத்து விட்டோம். நம்முடைய விதியை யாராலும் மாற்ற முடியாது. இப்படித்தான் எல்லோரும் சொல்லுவார்கள் அல்லவா. ஆனால் நம் விதியை மாற்றுவதற்கு ஒருவனால் மட்டும் முடியும். அந்த ஈசன் நினைத்தால் நம் தலையெழுத்தை மாற்றலாம். அதிலும் இந்த தேய்பிறை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் கடந்து போக வேண்டும், கரைந்து போக வேண்டும் என்று வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் அந்த கஷ்டங்கள் உங்கள் வாழ்க்கையை விட்டு போய்விடும்.

நாளைய தினம் (10-12-2023) சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம். இந்த நாளில் பிரதோஷ நேரத்தில் உங்கள் கஷ்டங்கள் கரைந்து போக, பிரம்மா கிறுக்கி வைத்த உங்கள் தலையெழுத்து சரியானபடி மாற, நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் என்ன, உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்

இந்த மந்திரத்தை நீங்கள் வாயால் உச்சரித்தாலும் சரி, அல்லது ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது போல ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து இந்த மந்திரத்தை உங்களால் முடிந்தவரை எழுதினாலும் சரி, உங்களுக்கு கிடைக்கும் பலன் ஒன்றுதான். நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, ஈசனை நினைத்து விரதத்தை தொடங்குங்கள்.

உங்களுடைய விரதம் எதுவுமே சாப்பிடாமல் இருந்தாலும் சரி, பால் பழம் சாப்பிட்டு இருந்தாலும் சரி, அல்லது மூன்று வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, சிவபெருமான் கோவித்துக் கொள்ள மாட்டார். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்து விரதம் இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மாலை பிரதோஷ நேரம் கோவிலுக்கு போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தவர்கள் கட்டாயம் போய் ஈசனை பாருங்கள். கோவிலில் ஜனங்களோடு முட்டி மோதி ஈசனை பார்க்க முடியவில்லை என்றாலும் சிவபெருமான் கோவிலில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாலே சிவன் உங்களை பார்த்து விடுவார், நீங்கள் சிவனை போய் பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

அமைதியாக அமர்ந்து கண்களை மூடி ‘சிவசம்போ’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். அந்த ஈசனே உங்கள் பக்திக்கு இறங்கி வந்து விடுவார். சிவசம்போ, சிவசம்போ, சிவசம்போ என்று சொல்லிக் கொண்டே அந்த பிரதோஷ நேரத்தை கோவிலில் கழித்து விடுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை அந்த சிவபெருமானிடம் சொல்லலாம் தவறு கிடையாது.

- Advertisement -

வேண்டுதலை சொல்லிவிட்டு மந்திர உச்சாடனத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்துங்கள். சில பேரால் கோவிலுக்கு செல்ல முடியாது சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே பூஜைஅறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கீழே ஒரு விரிப்பு விழித்து விட்டு பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சமயமும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது. பூஜையறையை எல்லாம் தொட வேண்டாம். நீங்கள் அமைதியாக வீட்டிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

நாளைய தினம் இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் உங்கள் தலை எழுத்து மாறும். குறைந்தபட்சம் 108 கணக்கு வச்சுக்கோங்க. அதிகபட்சம் லட்சத்து எட்டு முறை சொன்னாலும் தவறு இல்லை. கணக்கே கிடையாது. இந்த மந்திரத்தை கணக்கில்லாமல் சொல்பவர்களுக்கு சிவபெருமான் கணக்கில்லாமல் நல்லது செய்வார்.

இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டம் தீர பரிகாரம்

நாளைய தினம் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிவசிவா, சிவசம்போ, ஓம் நமசிவாய சொல்லிக்கிட்டே இருங்க. சிவபெருமானின் பாதங்களில் முத்தி கிடைத்துவிடும். அனைவருக்கும் சிவபெருமானின் பாதங்களில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -