பிரதோஷ நாளில் ஏற்ற வேண்டிய தீபம்

siva lingam dheepam
- Advertisement -

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ தினமானது மாதத்தில் இரண்டு முறை வரும். இது அனைவரும் அறிந்ததே. இதில் வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் இரண்டு உண்டு. இந்த பிரதோஷம் ஆனது திரியோதசி திதியில் வரும். இந்தப் பிரதோஷம் வரக் கூடிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாக இருக்கும்.

பொதுவாக நாம் அனைவருக்கும் சனி பிரதோஷத்தை பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். இதை தவிர மற்ற பிரதோஷ தினங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. நாளை 24.12.2023 ஞாயிற்றுக்கிழமையுடன் வந்திருக்கும் இந்த பிரதோஷமானது மிருத்யுஞ்சய பிரதோஷம் என்று சொல்லப்படும். ஒவ்வொரு நாளில் வரும் பிரதோஷத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

- Advertisement -

அதே போல் ஞாயிற்றுக்கிழமையுடன் வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில் நம்முடைய மரண பயம் நீங்கி நோய் நொடி இன்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். இந்த பிரதோஷ நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறு பூஜை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மரண பயம், பிணி நீங்கி ஆரோக்கியமாக வாழ பிரதோஷ வழிபாடு

இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் போல் செய்து கொள்ளுங்கள். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அத்துடன் சேர்த்து இந்த ஒரு தீபத்தை நாம் வீட்டில் ஏற்ற வேண்டும் அதை எப்போது ஏற்ற வேண்டும். அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹேரை நேரத்தில் ஏற்ற வேண்டும். இது காலை 6 லிருந்து 7 மணி, மற்றும் இரவு 8 லிருந்து 9 இந்த இரண்டு நேரத்தில் ஏற்றுவது தான் சிறந்தது. இந்த ஒரு மணி நேரமும் இந்த தீபம் எறிய வேண்டும். அதுவும் காலை இரவு இரண்டு நேரமும் ஏற்ற வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்த தீபம் ஏற்ற ஒரு சிறிய தட்டு, அகல் விளக்கு, வில்வ இலைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த சிறிய தட்டி வில்வ இலைகளை பரப்பி அதன் மேல் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபமானது கிழக்கு முகமாக எரிய வேண்டும். இது தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் எரிய வேண்டும். வில்வ இலை கிடைக்கவில்லை என்றால் கோதுமை தானியத்தை பயன்படுத்தலாம். அதுவும் கிடைக்காத பட்சத்தில் கோதுமை மாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை விளக்கு இலை வைத்து அப்படியே இரவும் இந்த தீபத்தை ஒரு மணி நேரம் ஏற்றி வைத்து விடுங்கள்.

மறுநாள் இதையெல்லாம் அப்புறப்படுத்தி விடுங்கள். இலையை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு வேளை நீங்கள் கோதுமையையும் கோதுமை மாவையும் வைத்திருந்தால் அதை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர சனிக்கிழமை பரிகாரம்

நாளை ஏற்றக் கூடிய இந்த தீபமானது உங்களுக்குள் இருக்கும் அச்சம், மரண பயம் போன்றவற்றை நீக்குவதுடன் ,தீராத நோய் நீங்கி ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையை தவறாது கடைபிடித்து நல்ல முறையில் வாழ சிவபெருமானை பெற வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -