உலகில் எது அதீத இன்பம் தரும்? உண்மையான குருடன் யார்? மதுவை விட போதை தரும் விஷயம் என்ன? இப்படி சில கேள்விகளுக்கு ஆதிசங்கரர் கூறும் அற்புத பதில்கள் என்ன? என்பதை நாமும் தெரிந்து கொள்வோமா?

athisankarar-lingam

பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், பத்து உபநிடதங்கள் ஆகிய இந்த இந்து சமய அடிப்படை நூல்களுக்கு விளக்க உரை அளித்து போதித்தவர் ஆதி சங்கரர். விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கு விளக்க உரை கொடுத்தவரும் இவரே என்கிற பொதுவான கருத்து உண்டு. பஜ கோவிந்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சூடாமணி போன்ற எண்ணற்ற நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். கேரளத்தில் பிறந்த ஆதிசங்கரர், கிபி நான்காம் நூற்றாண்டுகளில் வந்ததாகவும், ஏழாம் நூற்றாண்டில் இருந்ததாகவும் இரு வேறு கருத்துகள் உள்ளன. இவர் எழுதிய ‘பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா’ எனும் புகழ் பெற்ற நூல் சில கேள்விகளும், பதில்களும் கொண்டதாக அடங்கியுள்ளது. அதிலிருந்து சில சுவாரஷ்ய கேள்விகளையும், பதில்களையும் தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

aathisankarar

1. இந்த உலகத்தில் அதீத இன்பம் தரும்?
இந்த உலகத்தில் தர்மம் செய்வதை விட அதீத இன்பம் தரக்கூடிய விஷயம் எதுவுமில்லை என்று ஆதிசங்கரர் கூறுகிறார். நம்மால் முடிந்த தர்மத்தை செய்து வந்தால் அதை விட மேன்மையான விஷயம் எதுவும் இல்லை என்று கூறலாம்.

2. உண்மையில் விஷம் என்பது எது?
விஷத்தை காட்டிலும் கொடியது பெரியவர்கள் நமக்கு சொல்லும் அறிவுரைகளை நாம் அவமதித்து நடப்பது தான். அவர்கள் அனுபவசாலிகள் எவ்வளவோ விஷயங்களை கற்று தெரிந்து கொண்டு தான் நமக்கு அறிவுரை கூறுவார்கள் ஆனால் அதை அவமதித்தால் விஷத்தை அருந்துவதற்கு சமமாக நிலைமை ஆகிவிடும்.

yoga

3. திருடர்கள் யார்?
நம் ஐந்து புலன்களையும் நம்மையும் மீறி இழுத்துக் கொண்டு செல்லும் விஷயங்கள் கள்வர்களாக கருதப்படுகிறது.

- Advertisement -

4. நம் உண்மையான எதிரி யார்?
நமக்கு உண்மையான எதிரிகள் என்றால் அது நம்மிடம் இருக்கும் சோம்பல் ஆகும். வெளியிலிருந்து எந்த எதிரியும் தேவையில்லை உங்களிடம் இருக்கும் சோம்பலை விரட்டினாலே நீங்கள் எதிலும் ஜெயித்து விடலாம்.

sad

5. எந்த விஷயத்திற்கு எல்லோரும் பயப்படுவார்கள்?
பிறப்பு, இறப்பு என்பது நம்மை கேட்டு வருவதில்லை. எப்படியோ பிறந்து விட்டோம் ஆனால் எப்படி இறக்கப் போகிறோம் என்கிற பயம் தான் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பயம் ஆகும்.

6. மதுவை விட போதை தரும் விஷயம் ஒன்று?
மது குடிப்பதால் உண்டாகும் மயக்கத்தை போல போதை தரும் விஷயம் ஒன்று தான் பற்றுதல் என்பது ஆகும். ஒன்றன் மீது நாம் பற்று கொண்டு விட்டால் அதில் இருந்து மீள்வது என்பது சற்று சிரமமான விஷயம் தான்.

buddha-puthar-seedar

7. உண்மையான குருடன் யார்?
இவ்வுலகில் உண்மையான குருடர்கள் என்றால் அது ஆசைகள் அதிகம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறினார். அதே போல ஆதிசங்கரரும் ஆசைகள் அதிகம் கொண்டுள்ளவர் குருடனாக இருப்பதற்கு சமமாகும் என்கிறார்.

8. உலகின் உண்மையான வீரன் யார்?
நான் தான் தைரியசாலி, நான் தான் வீரன் என்று பிதற்றிக் கொள்பவர்கள் எல்லாம் உண்மையில் வீரன் கிடையாது. தன் மனதை அடக்கி தீய வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஒவ்வொருவரும் மிக சிறந்த வீரன் தான்.

praying-god1

9. மதிப்பு என்றால் என்ன? அதன் மூலம் என்ன?
எந்த ஒரு விஷயத்திற்காகவும் யாரிடமும் எதுவும் கேட்காமல் இருப்பது மதிப்பு ஆகும். சிறு சிறு விஷயங்களுக்கு கூட அடுத்தவரின் துணை நாடும் இவ்வுலகில் யாரையும் நம்பி இராமல் தானே அனைத்தையும் செய்து கொள்வது மதிப்பின் மூலம் ஆகும்.

10. துக்கம் தரும் விஷயம் என்ன?
ஒருவருக்கு மிகுந்த துக்கம் தரும் விஷயம் என்றால் அது மனநிறைவு இல்லாமல் இருப்பது ஆகும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். மனித மனம் எதையும் போதும் என்று நிறுத்திக் கொள்வதில்லை. இன்னும் வேண்டும், இதை விட உயர்ந்ததாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். இது தான் அதிகம் துக்கம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.