பாவங்களை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

prathosa valipadu
- Advertisement -

சொல்ல முடியாத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருக்கும் மனிதர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை கூறுவதற்கு பதிலாக இறைவனிடம் முறையீடு செய்வார்கள். அப்படி முறையீடு செய்யும் பொழுது சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் கண்டிப்பான முறையில் நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அப்படி நம்முடைய கஷ்டங்கள் குறைய பிரதோஷ நாளன்று சிவபெருமானை எப்படி வழிபட்டு வலம் வர வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரதோஷம் என்று கூறியதும் நம் நினைவிற்கு வருபவர் சிவபெருமானும் நந்தி பகவானும் தான். பிரதோஷ தினத்தன்று மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி என்பது பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த நேரத்தில் முடிந்தவர்கள் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும், வேறு எந்த செயல்களையும் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பதால் தான் அதற்கு பிரதோஷம் என்று பெயர் வந்தது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளன்று தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கவும், முந்தைய ஜென்மத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், நம் முன்னோர்களால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கவும் சிவபெருமானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும்.

தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் பிரதோஷ தினத்தன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். பொதுவாக நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்த பிறகு இறைவனை வலம் வருவோம். அப்படி வலம் வரும்போது வலது புறமாக இருந்துதான் வலம் வருவோம். ஆனால் நம்முடைய கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரதோஷ நாளன்று இடதுபுறமாக வலம் வரவேண்டும். முதலில் கொடி மரத்திற்கு சென்று அங்கு ஒரு தீபம் ஏற்றி வைத்து ஒரு சுற்று இடது புறமாக சுற்றி வர வேண்டும்.

- Advertisement -

பிறகு மறுபடியும் இன்னொரு தீபம் ஏற்றி வைத்து இரண்டாவது சுற்று சுற்றிவர வேண்டும். இப்படி தொடர்ந்து 12 தீபங்களை ஏற்றி வைத்து 12 சுற்றுகளை சுற்றிவர வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு வீட்டில் இருக்கும் அனைவரின் பெயர்களையும் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிப்பதை நம்மால் உணர முடியும்.

எந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரதோஷ தினத்தன்று இப்படி இடதுபுறமாக வலம் வந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் நந்தி பகவானுக்கு நம் கைகளிலாலேயே அருகம்புல்லை கட்டி அணிவிப்பதன் மூலமும் அவர் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு துணை நிற்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளை அழைக்கும் பூஜை

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி வலம் வந்தால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் குறையும்.

- Advertisement -