நவ சக்திகளின் அருளை ஒருசேர பெற உதவும் சிறப்பான மந்திரம்

1117
Prathyangara devi
- விளம்பரம் -

இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அவனுடைய ரத்தத்தை பருகியதால் கடுமையான உக்கிரம் கொண்டார். நரசிம்மரின் உக்கிரத்தை குறைத்து சாந்தமடைய செய்ய சிவபெருமானின் அம்சமான சரபரிடம் இருந்து தோன்றியவர் தான் பிரத்யங்கிரா தேவி என்று புராண கதைகள் கூறுகின்றனர். பல சிறப்புக்கள் உடைய பிரத்யங்கிரா தேவியை எவர் ஒருவர் வழிபட்டு கீழே உள்ள மந்திரம் அதை ஜெபிக்கிறார்களோ அவருக்கு நவ சக்திகளின் அருள் கிடைக்கும் அதோடு எதிரிகள் அழிவர், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

pratyangira devi

பிரத்யங்கிரா தேவி மந்திரம்:
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தீ நோரயா:
க்ரூராம் க்ரித்யாம் வதூமிவா தாம் ப்ரம்மணா அபநிர்ன்னுதமா:
ப்ரத்யக் கர்த்தாரம் ருச்சது ஹ்ரீம் ஓம்.
இந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்; சந்தஸ்: அனுஷ்டுப்;
தேவதை:மஹா பிரத்யங்கிரா தேவி.

- Advertisement -

நவசக்திகள் என்று சொல்லக்கூடிய பூமி சக்தி, ஜல சக்தி, அக்னி சக்தி, காற்று அல்லது உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, அமிர்த சக்தி, சூரிய சக்தி, பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தி, மோட்சம் அருளும் சக்தி ஆகிய சக்திகளின் ரூபமாக விளங்குகிறார் பிரத்யங்கிரா தேவி. உடல், மன தூய்மையோடு தினமும் பிரத்யங்கிரா தேவியை வணங்கி மேலே உள்ள மந்திரத்தை 9 முறை கூறி வர நவ சக்திகளின் பரிபூரண அருளை பெற்று பெரு வாழ்வு வாழலாம்.
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
விதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்

English Overview:
Here we have Goddess Pratyangira devi mantra/sloka in Tamil. If one worship Pratyangira devi and chant the above mantra then he will get grace of Goddess Pratyangira devi

Advertisement