இறால் வாங்கினால் ஒரு முறை மறக்காம இப்படி மசாலா அரைச்சு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சும்மா டேஸ்ட் அப்படி இருக்கும். ஒரு மாசம் ஆனா கூட இதோட டேஸ்ட் மறக்க மாட்டீங்க.

prawn gravy
- Advertisement -

அசைவ வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும் அதிலும் இந்த இறாலுக்கென்று தனியாக ஒரு சுவையை உண்டு இறால் பிடிக்காது என்று சொல்பவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள் குழந்தை முதல் பெரியவர் வதை இறால் என்றால் நிச்சயமாக நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய பொருள் உணவு. அப்படி சுவையான ஒரு இறால் தொக்கு மேலும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த இறால் தொக்கு செய்வதற்கு முதலில் 500 கிராம் இறால் வாங்கி சுத்தம் செய்து நன்றாக இரண்டு தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு அதை அப்படியே எடுத்து வைத்து விடுங்கள். அடுத்து இரண்டு பெரிய வெங்காயம் 3 மீடியம் சைஸ் தக்காளி இதை நல்ல பொடியாக நறுக்கி இதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த இறால் தொக்கு மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடான பிறகு 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள் அத்துடன் அரை ஸ்பூன் சோம்பு அரை ஸ்பூன் சீரகம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தேங்காயில் நிறம் சிவந்து வரும் வரை வருத்தப்பிறகு இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த இறாலை தாளிக்க வேண்டும் அதற்கு அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் இந்த தொக்கிக்கு கொஞ்சம் எண்ணெய் கூடுதலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும் எண்ணெய் சூடான உடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள் வெங்காயம் பாதி அளவு வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து அதுவும் பாதி வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வெங்காயம் தக்காளி எல்லாம் குழைந்து வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

இவையெல்லாம் வாங்கிய பிறகு இதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் தனியாத்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிறகு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து அதையும் ஒரு முறை நன்றாக கலந்த பிறகு சுத்தம் செய்து வைத்த இறாலை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரைக்கும் எத்தனையோ தட்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அரிசிமாவும் கீரையும் சேர்த்து நல்ல ஆரோக்கியமா அதே நேரத்தில் கிரிஸ்பியான இந்த தட்டை செய்யுங்க ஒரு வாரம் ஆனா கூட கெட்டே போகாது.

இறாலை சேர்த்து நன்றாக கலந்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள் ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அரை ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் பெப்பர் தூள் ஒரு கொத்து நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான இறால் மசாலா தொக்கு தயார் ஒரு முறை இதை டேஸ்ட் பாத்துட்டீங்கன்னா நிச்சயமா விடவே மாட்டீங்க.

- Advertisement -