உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? இந்த தெய்வத்தை வழிபட்டாலே போதும்.

job-god

நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகிறது. 100 மனிதர்கள் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும், அந்த வேலையை ஒரு இயந்திரம் செய்து முடித்து விடுகிறது‌. அதுவும் மனிதர்களின் வேகத்தைவிட அதிவேகமாக இயந்திரங்கள் செயல்படுகிறது. இப்படி இருக்க ஒருவருக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், அது நம் மனதிற்கு பிடித்த வேலையாக இருக்கிறதா, நாம் படித்த படிப்பிற்கு தகுதியான வேலையாக இருக்கின்றதா, என்றெல்லாம் இந்த சூழ்நிலையில் பார்க்கவே முடிவதில்லை. எந்த வேலை கிடைத்தாலும் சரி அந்த வேலைக்கு செல்வோம்! என்று நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அந்த வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஏனென்றால் நம்முடைய பொருளாதார சூழ்நிலையை சமாளிப்பதற்கு நாம் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் சிலருக்கு இருக்கும். ஆனால் சிலருக்கு தன் தகுதிக்கு குறைவான வேலை கூட கிடைக்காது. எவ்வளவு முயற்சி செய்தாலும், வேலை தன் கைக்கு கிடைத்து விட்டது என்று நினைப்பார்கள். ஆனால் கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்று வந்து அந்த வேலையை தட்டிக்கழித்து விடும். தன்னைவிட தகுதி குறைவான ஒருவருக்கு அந்த வேலை செய்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் நீங்கள் எதிர்க் கொள்பவர்களாக இருந்தால், இந்த சின்ன பரிகாரத்தின் மூலம் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

Astrology

உங்களுக்கு வேலை கிடைப்பதில் ஜாதகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்திருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் வாரம்தோறும் சனிக்கிழமை அன்று லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று 16 நெய் தீபங்கள் ஏற்றவேண்டும். இந்த விளக்கை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஏற்றுவது நல்லது. தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு, அந்த கோவிலிலேயே ஒரு ஐந்து நிமிடங்கள் அமர்ந்து கண்களை மூடி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று அந்த இறைவனை நன்றாக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்‌. இப்படி தொடர்ந்து 9 சனிக்கிழமைகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இறுதி வாரமான ஒன்பதாவது வாரம் தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்கு, சுவாமிக்கு மாலை இவைகளை வாங்கி வந்து, உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு உங்களது பரிகாரத்தை சுபமாக முடித்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக சிலருக்கு ஜாதக கட்டத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் வேலை மட்டும் கிடைக்கவே கிடைக்காது. இப்படிப்பட்டவர்களாக இருந்தால், இவர்களை கண்திருஷ்டி அல்லது ஏதாவது ஒரு கெட்ட சக்தியோ, எதிர்மறை ஆற்றலோ தாக்கியிருக்கும். ஆனால் சிலர் இதை நம்ப மாட்டார்கள். இந்த பூமியில் நல்ல சக்தி எப்படி உள்ளதோ, அதேபோல் தான் கெட்ட சக்தியும் இருந்து தான் வருகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

Narasimmar

இந்த பரிகாரத்தை ஏழு நாட்கள் தொடர்ந்து ஒரே நேரத்தில் செய்து வர வேண்டும். முதலில் 7 எலுமிச்சம் பழங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சை பழம் என்ற வீதம் இந்த பரிகாரத்தை தினம்தோறும் செய்து வந்தால் போதும். உங்கள் வீட்டினுள்ளேயே முதல் நாள் ஒரு எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக்கொண்டு, கிழக்கு பக்கமாக நின்று, அந்தப் பழத்தை உங்கள் தலையை 13 முறை வலப்பக்கமாக சுற்றிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நான்கு தெருக்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்று, நான்கு திசைகளிலும் ஒவ்வொரு துண்டுகளையும் வீசிவிட வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும், இந்த எலுமிச்சை பழத் துண்டுகளை வீச முடியாது என்று நீங்கள் நினைத்தால், யாரும் முழிப்பதற்கு முன்பு அதிகாலை வேளையிலேயே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஆனால் முதல் நாள் நீங்கள் எந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ, தொடர்ந்து ஏழு நாட்களும், அதே நேரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து முடித்த பின்பு, உங்களுக்கு ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மூலமாகவோ அல்லது கண் திருஷ்டியின் மூலமாகவோ தடைகள் இருந்திருந்தால் நிச்சயம் அந்த தடையானது நீங்கிவிடும். நீங்கள் நினைத்த வேலையும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையோடு செய்தால் மட்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட கணவனின் காலை மனைவி பிடிக்க வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pariharam for job in tamil. Pariharam for getting job in tamil. Velai kidaika pariharam in tamil. Niranthara velai kidaika pariharam.