- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுன்பங்களை தீர்க்கும் குரு பஞ்சமி

துன்பங்களை தீர்க்கும் குரு பஞ்சமி

- Advertisement -

வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கவும், தீய சக்திகளை விரட்டியடிக்கவும் உதவக்கூடிய உக்கிர தெய்வங்களின் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றாலும் தன வசீகரத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு சில குறிப்பிட்ட வழிபாட்டு முறை இருக்கிறது. அந்த வழிபாட்டை குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை வரக்கூடிய பஞ்சமி திதியில் செய்பவர்களுக்கு தன வசீகரம் உண்டாகும். தன வசீகரத்தை ஏற்படுத்தி வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை தரக்கூடிய அற்புதமான வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மாலை 4:28 மணிக்கு பஞ்சமி திதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2:01 மணி வரை பஞ்சமி திதி இருக்கிறது. இந்த பஞ்சமி திதி வியாழக்கிழமை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை இரவு தான் நாம் வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமை. குரு தான் நம்முடைய அனைத்து விதமான நன்மைகளையும் தரக்கூடியவராக திகழ்கிறார். குரு பகவானின் பார்வை பட்டாலேயே நம் வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாகும். அப்படிப்பட்ட குரு வாரத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய துன்பங்கள் நீங்கி தன வசீகரம் உண்டாகும்.

- Advertisement -

இந்த தன வசீகர வழிபாட்டை செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து இரவு 8:30 மணிக்குள் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக 8 மணியிலிருந்து 8:30 மணிக்குள் வரக்கூடிய குரு ஹோரையில் செய்யும் பொழுது நம்முடைய வழிபாட்டால் தன வசீகரம் என்பது நமக்கு உண்டாகும். வராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதில் மஞ்சள் கொட்டி பரப்பி அதற்கு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக கருப்பு கொண்டை கடலை சுண்டல் மற்றும் வாராகி அம்மனுக்குரிய கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு முதலில் கணபதியின் மந்திரமான “ஓம் கம் கணபதியே நம” என்னும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும் பிறகு தன வசீகரத்தை ஏற்படுத்துவதற்காக வாராகி அம்மானு அம்மனை வழிபாடு செய்ய போகிறோம் என்பதால் அந்த வழிபாட்டில் எந்தவித தடைகளும் வரக்கூடாது என்பதற்காக “ஓம் வம் வராகியே நம” என்னும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். பிறகு தன வசீகர மந்திரத்தை 106 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹிரீம் கிளீம் வராகி தேவியை நம
கிளீம் வராகமுகி ஸ்ரீம் சித்தி சொரூபிணி ஸ்ரீம் தன வஷிங்கரி தனம் வர்ஷய வர்ஷய நமஹ

இதையும் படிக்கலாமே: ஆவணி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

சக்தி வாய்ந்த இந்த தன வசீகரி மந்திரத்தை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து கூறுபவர்களுக்கு துன்பங்கள் நீங்கி தன வசீகரம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்