தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும். நீங்களும் முயற்சி செய்யலாமே!

பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. இது ஒரு சின்ன முயற்சிதான். இந்த இரண்டு வார்த்தையில் என்ன ரகசியம் மறைந்துள்ளது? எப்போது இந்த இரண்டு வார்த்தையை சொல்ல வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

curd

பொதுவாகவே தயிர் என்பது மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்படும் ஒரு பொருள். இந்தத் தயிரை முடிந்தவரை கடைகளிலிருந்து வாங்காமல், நம் வீட்டிலேயே உறை போடுவது நமக்கு லட்சுமி கலாட்சத்தை தேடித்தரும். இது நிதர்சனமான உண்மை. தினந்தோறும் எந்த வீட்டில் இரவு நேரத்தில் தயிர் உறை ஊற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தயிரை உறை போடும் போதும், காலையில் கையில் எடுக்கும் போதும் தான் இந்த வார்த்தையை நாம் சொல்லி மகாலட்சுமியின் அருளைப் பெற போகின்றோம்.

முதல்நாள் இரவு பாலில் உறை போடும்போது ‘சேமிரி’ என்ற வார்த்தையை சொல்லி உறை ஊற்றுங்கள். காலையில் பால் கெட்டிதயிராக மாறியிருக்கும். அதை உங்கள் கைகளில் முதன்முதலில் எடுக்கும்போது ‘பெருகு’ என்ற வார்த்தையை சொல்லி எடுக்க வேண்டும். அதாவது இரவு நேரத்தில் உறை போடுவது சேமிப்பிற்கான அடித் தளத்தையும், மறுநாள் காலை அது பெருகி தயிராக மாறுவது, நம் செல்வத்தை பெருக்குவதையும் குறிக்கிறது. இது உண்மையான ஒன்று.

mahalakshmi

இரவு நேரத்தில் நாம் உறைப்போடும் தயிரின் மூலமாக மகாலட்சுமியானவள் நம் வீட்டில் வந்து தங்கி, மறுநாள் காலை நம் செல்வத்தை பெருக்குவதற்கு துணையாக நிற்பாள் என்பது உண்மையான ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் இதை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

- Advertisement -

இதோடு சேர்த்து நீங்கள் காய்கறி வாங்குவதற்கு என்று உங்கள் வீட்டில் ஒரு கூடையை பயன்படுத்தி வருவீர்கள். அந்தக் கூடையில் எப்பொழுதும் இரண்டு நெல்லிக்கனிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காயை உங்களது காய்கறி கூடையில் நிரந்தரமாக வைத்திருந்தால், உங்களின் தன தான்யத்திற்க்கு எந்த ஒரு குறைபாடும் வராது என்றும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

Nellikai benefits in tamil

அந்த நெல்லிக்காய் சிறிது நாட்களில் காய்ந்து போகும். இருந்தாலும் அது அந்த காய் கூடையிலேயே இருக்கட்டும். மிகவும் வாடி விட்டால், கால் படாத இடத்தில் அந்த நெல்லிக்காயை எடுத்து போட்டுவிட்டு, மீண்டும் இரண்டு நெல்லிக்காய்களை வாங்கி வைத்து விடுங்கள். இல்லை என்றால் வாரத்திற்கு ஒருமுறை பழைய நெல்லிக்காய்களை நீங்கள் சாப்பிட உபயோகப்படுத்திக் கொண்டு, புதியதாக இரண்டு நெல்லிக்காய்களை வாங்கி அந்த கூடையில் போட்டு வைத்து விடலாம். இப்படி தொடர்ந்து செய்து பாருங்கள் பலனை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கையில் பணம் நிரந்தரமாக தங்கவில்லையா? இரவு நேரத்தில் இந்த 1 பொருளை சாப்பிடாதீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam sera Tamil. Panam sera tips Tamil. Panam sera pariharam. Panam sera pariharam Tamil.