ஒரே வாரத்தில் உங்களுடைய முடி 1 இன்ச் வளரும். புரோட்டின் சத்து நிறைந்த இந்த ஹேர் பேக்கை போட்டு தான் பாருங்களேன்.

hair
- Advertisement -

முட்டையில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதனால்தான் முட்டையின் வெள்ளைக்கருவை தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்போது தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து முடி வளரத் தொடங்கும். முட்டையில் மட்டும் புரோட்டின் சத்து இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. முட்டையைப் போல உளுத்தம் பருப்பிலும் அதிகப்படியான புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது. முட்டையை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புரோட்டீன் சத்து நிறைந்த ஹேர் பேக்கைப் போட்டுப் பாருங்கள்.

முட்டையை உங்களுடைய தலைக்கு நீங்கள் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. நீங்களும் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணலாம் தவறு கிடையாது. முந்தைய நாள் இரவே ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து விடுங்கள். ஒரு முறை கழுவி விட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை உளுந்து வெந்தயம் இரண்டுமே தண்ணீரில் நன்றாக ஊறி வெந்து இருக்கும். மிக்ஸி ஜாரில் உளுந்தையும் வெந்தயத்தையும் போட்டு ஊறவைத்த தண்ணீரை ஊற்றி, நான்கு செம்பருத்தி பூக்களை போட்டு நைசாக இந்த பேக்கை அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான புரோட்டின் ரிச் ஹேர் பேக் தயார்.

இந்த பேக்கை தலையில் எப்படி அப்ளை செய்வது. ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் முதலில் நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் கழித்து இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் ஹேர் பேக் போட்டு 20 லிருந்து 25 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விட வேண்டும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். பயன்படுத்திய ஒரே வாரத்தில் சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். தொடர்ந்து இந்த பேக்கை 3 மாதங்கள் பயன்படுத்தி வர மூன்று மடங்கு முடி வளர்ச்சி அதிகரிக்கும். நீளமாகவும் அடர்த்தியாக முடி வளர தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள்.

பின்குறிப்பு: இந்த பேக்கை தயார் செய்ய முழு உளுந்தம் பருப்பை பயன்படுத்துங்கள். அப்போதுதான் ஹேர்பேக் நைஸாக நமக்கு கிடைக்கும். இதே போல வெந்தயம் உளுந்து இரண்டுமே குளிர்ச்சி நிறைந்த பொருட்கள். உங்களுடைய உடம்பு குளிர்ச்சி நிலையை தாங்காது. சைனஸ் பிரச்சனை உள்ளது என்றால் இந்த ஹேர் பேக்கை 10 நிமிடங்கள் மட்டுமே தலையில் வைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு செம்பருத்தி பூக்களாக கிடைக்கவில்லை என்றால், செம்பருத்திப் பூ பொடியை கூட இந்த பேக் தயார் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -