அடிக்கிற வெயிலுக்கு தண்ணீர் அதிகம் குடித்தாலும் தாகம் தீரவில்லை. எனவே தினமும் இப்படி உணவுடன் தண்ணீர்க்காய் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் குளுகுளுவென இருக்கும்

poosani
- Advertisement -

நாளுக்கு நாள் வெயிலின் சூடு அதிகமாகி கொண்டே இருக்கிறது. எவ்வளவு தூரம் நடந்து சென்றாலும், அல்லது வாகனத்தில் சென்றாலும் கூட வெயிலின் தாக்கம் அதிகமாக தான் தெரிகிறது. இதற்காக செல்லும் இடத்தில் எல்லாம் தண்ணீர் வாங்கி குடித்தாலும் அது நமது தாகத்திற்கு போதுமானதாக இருப்பதில்லை. ஏனென்றால் உடலிலுள்ள ஈரப்பதம் வெயிலின் சூட்டிற்கு குறைந்து கொண்டே செல்லும். எனவே தண்ணீர் அதிகமாக குடிப்பதுடன், நாம் உண்ணும் உணவுகளிலும் தண்ணீர் காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது உடலில் அதிக அளவு வேர்த்துப் போனாலும் உடல் சோர்வு ஏற்படாமல், அதிக தாகம் எடுக்காமல் வெயிலிலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். அப்படி அவசியம் நமது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கள் பூசணிக்காய், புடலங்காய். இவை இரண்டையும் வைத்து ஒரு சுவையான காய்கறி பொரியலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 100கிராம், புடலங்காய் – 100 கிராம், பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 10, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பூசணிக்காய் மற்றும் புடலங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு இந்த காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு மற்றொரு அடுப்பில் மீது ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு, தனியா மற்றும் 8 வரமிளகாய் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அரை மூடித் தேங்காய் பொடியாக துருவிக் கொண்டு, அதனையும் இவற்றுடன் சேர்த்து லேசாக வதக்கி, அடுப்பை அனைத்துவிட்டு, இவற்றை வேறொரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நன்றாக வெந்து வந்த காய்கறிகளுடன் அரைத்த மசாலா மற்றும் வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து பொரிய விட்டு, இதனை காய்கறிகளுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். இறுதியாக ஒரு பத்து கொத்தமல்லிதழை தூவவேண்டும்.

- Advertisement -